• May 18 2024

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராயின் பெஸ்ட்லுக் போஸ்டரும் ரிலீஸ்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரமாண்ட திரைப்படங்களை இயக்கக் கூடியவரும் பல ஹிட் படங்களை இயக்கியவராகவும் வலம் வருபவர் தான் இயக்குநர் மணிரத்னம். இவர் தற்பொழுது பொன்னியின் செல்வன் என்னும் திரைப்படத்தை பிரமாண்ட பொருட் செலவில் எடுத்து வருகின்றார்.

இப்படத்தின் படப்பிடிப்பானது தாய்லாந்து, மும்பை, ஹைதராபாத், பாண்டிச்சேரி என மாறி மாறி நடந்து வருகின்றது. இப்படத்தில் விக்ரம், கார்த்தி ,ஜெயம் ரவி ,த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்து வருகின்றது.

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் படத்தின் திரை வடிவம் தான் இப்படம். இதில் அடுத்தடுத்து நடிக்கும் நடிகர்களின கதாபாத்திர லுக் போஸ்டர்கள் வெளியாகிக் கொண்டு இருக்கும் நிலையில் விக்ரம் மற்றும் கார்த்தியின் பெஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகியிருந்தது.

இந்த நிலையில் தற்போது நடிகை ஐஸ்வர்யா ராயின் பெஸ்ட் லுக் புகைப்படம் வெளியாகியுள்ளது. லைகா நிறுவனம் வெளியிட்டுள்ள அந்த புகைப்படம் இதோ,

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement