• May 07 2024

நயன்தாராவை அடுத்து 'ஜவான்' படத்தில் இணைந்த பிரபல நடிகை... அட அதுவும் இவங்களா...? அப்போ படம் செம ஹிட் தான்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் டாப் இயக்குநர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் அட்லீ. இவர் 'ராஜா ராணி' என்ற படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் வெற்றி இயக்குநராக அறிமுகமாகி இருந்தார். தனது முதல் படத்திலேயே முத்திரை பதித்த அட்லீ, அடுத்ததாக விஜய்யுடன் கைகோர்த்து 'தெறி, மெர்சல், பிகில்' என பல ஹிட் படங்களை கொடுத்தார்.



இதனை தொடர்ந்து தற்போது பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிக்கும் 'ஜவான்' என்ற படத்தை இயக்கி வருகின்றார். மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் ஷூட்டிங் பல நாட்களுக்கு பிறகு மீண்டும் தொடங்கப்பட்டு இருக்கிறது.


இப்படத்தில் ஷாருக்கானுடன் இணைந்து நயன்தாரா, அனிருத், யோகி பாபு உள்ளிட்ட முக்கிய தமிழ் நட்சத்திரங்கள் பலரும் பணியாற்றி வருகின்றனர். அதுமட்டுமல்லாது சமீபத்தில் தான் இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடிப்பது உறுதியானது. இதனை அவரே சமீபத்தில் அளித்திருந்த பேட்டி ஒன்றில் உறுதி செய்திருந்தார்.



இந்நிலையில் இப்படம் தொடர்பாக தற்போது மற்றுமோர் தகவல் வெளியாகி இருக்கின்றது. அதாவது விஜய் சேதுபதியை தொடர்ந்து இப்படத்தில் நடிகை தீபிகா படுகோண் நடிப்பதாக கூறப்படுகின்றது. மேலும் தற்போது அவர் ஷாருக்கானுடன் இணைந்து சென்னையில் இருப்பதாகவும் தகவல் பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement