• May 03 2024

மும்பையைத் தொடர்ந்து பெங்களூரிலும் ப்ரமோஷன் பணியில் இறங்கிய பொன்னியின் செல்வன் படக்குழு- வெளியாகிய லேட்டஸ்ட் கிளிக்ஸ்

stella / 1 year ago

Advertisement

Listen News!


இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில், லைகா நிறுவனம் சுமார் 500 கோடி பட்ஜெட்டில் இரண்டு பாகங்களாக தயாரித்துள்ள திரைப்படம் 'பொன்னியின் செல்வன்'. இப்படத்தின் முதல் பாகம், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், 30 ஆம் தேதி வெளியாகி பிரமாண்ட ஓப்பனிங் கண்டதோடு, ரசிகர்களின் அமோக வரவேற்போடு, சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.


இந்நிலையில் பொன்னியின் செல்வன் 2 படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், ஒரு பக்கம் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த, விக்ரம், திரிஷா, ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா லட்சுமி, சோபிதா துலி பாலா ஆகியோர் தீவிர ப்ரோமஷன் பணியில் இறங்கியுள்ள நிலையில், படக்குழுவும் படம் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வண்ணமாக சில ப்ரோமோ வீடியோக்களை வெளியிட்டு வருகிறது.


அந்த வகையில் கமல்ஹாசனின் கர்ஜனை குரலில்... ஒலிக்கும் பொன்னியின் செல்வன் 2 படத்தின் இன்ட்ரோ வீடியோ இன்றைய தினம் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்திருந்தது. தற்பொழுது ப்ரமோஷனில் கலந்து வரும் பிரபலங்கள் பெங்களூருக்கு ப்ரமோஷனுக்காக சென்றுள்ளனர். அங்கு எடுத்த புகைப்படங்கள் வைரலாகி வருவதைக் காணலாம்.



Advertisement

Advertisement

Advertisement