• May 18 2024

நீண்ட காலத்திற்குப் பின்னர் டிவி நிகழ்ச்சிக்கு வந்த தேனிசைத் தென்றல்.. வைரலாகும் வீடியோ.. குஷியில் ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

1986ஆம் ஆண்டு 'மனசுக்கேத்த மன்னாரு' என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் தேனிசைத் தென்றல் தேவா. இவர் தமிழ் சினிமா ரசிகர்களை ஒருகாலத்தில் தனது இசையின் மூலம் கட்டிப்போட்டு வைத்தவர்.


தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள படங்கள் என 400க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்திருக்கின்றார். அதுமட்டுமல்லாது பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களுக்கும் இசையமைத்து பாடி உள்ளார்.


மேலும் சமீபத்தில் கூட தேவாவின் இசைக் கச்சேரி பிரமாண்டமாக நடந்தது, அதில் ரஜினி கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்திருந்தார். இந்நிலையில் தற்போது தேவா அவர்கள் பல வருடங்களுக்கு பிறகு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டிருக்கிறார். 


ஆம், அதுவேறு எந்த நிகழ்ச்சியும் இல்லை, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தான். அதற்கான புரொமோ வீடியோ தற்போது வெளியாகி இருக்கின்றது. இதனைப் பார்த்த ரசிகர்கள் இந்த எபிசோட்டை கட்டாயம் பார்த்தே ஆக வேண்டும் எனக் கூறி அந்த வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.


Advertisement

Advertisement