• May 29 2023

நீண்ட நாளுக்குப் பின்னர் கணவருடன் மகிழ்ச்சியாக இருக்கும் புகைப்படத்தை பதிவிட்ட நிக்கி கல்ராணி- வேற லெவல் அழகில் ஜொலிக்கிறாரே

stella / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 'மிருகம்' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் ஆதி. தன்னுடைய முதல் படத்திலேயே மிகவும் துணிச்சலான கதாபாத்திரத்தை ஏற்று நடித்து, ரசிகர்களை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தார். விமர்சனம் ரீதியாக இவருடைய நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்டை குவித்தது. இதை தொடர்ந்து, ஈரம், ஆரவான், கோச்சடையான், என ஒரே மாதிரியான கதைகளை தேர்வு செய்து நடிப்பால், தொடர்ந்து வித்தியாசமான கதையை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

அதே போல், ஹீரோவாக மட்டுமே நடிக்காமல் வில்லன் சப்ஜெட் கதைகளையும் தேர்வு செய்து நடிக்க துவங்கியுள்ளார். தமிழ் - தெலுங்கு என இரு மொழிகளிலும் கவனம் செலுத்தி வரும் ஆதி, சமீபத்தில் தான் திருமண பந்தத்தில் இணைந்தார்.


யாகாவாராயினும் நாகாக்க, மரகத நாணயம் ஆகிய படங்களில் நடித்த போது இந்த படத்தின் நாயகி, நிக்கி கல்ராணியை கடந்த சில வருடங்களாகவே காதலித்து வந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.


 திருமணத்திற்கு பின்னர், திரையுலகில் இருந்து விலகிய நிக்கி கல்ராணி குடும்பத்துடன் நேரம் செலவிட்டு வருகிறார்.இந்த நிலையில் இன்று சிரிப்பு தினம் என்பதால்  நீண்ட நாளுக்குப் பிறகு தன்னுடைய கணவருடன் சிரித்தபடி நின்று புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார். இந்தப் புகைபபடத்திற்கு ரசிகர்கள் தமது லைக்குகளைக் குவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement