• Apr 17 2026

கலகலப்பான காமெடி-ரொமான்ஸ் படத்தில் அதிதி ஷங்கர்.. இயக்குனர், ஹீரோ யார் யார்?

Sivalingam / 2 years ago

Advertisement

Listen News!

நடிகை அதிதி ஷங்கர் தற்போது விஷ்ணுவர்தன் இயக்கி வரும் திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இதில் அதர்வாவின் சகோதரர் ஆகாஷ் நாயகனாக நடித்து வருகிறார் என்பதும் தெரிந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட நிறைவடைய இருக்கும் நிலையில் அதிதி ஷங்கர் நடிக்க இருக்கும் புதிய படம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

கார்த்தி நடித்தவிருமன்என்ற திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமான ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர், அதன்பின்னர் சிவகார்த்திகேயன் நடித்தமாவீரன்திரைப்படத்தில் நடித்தார். இந்நிலையில் இயக்குனர் ராஜேஷ் எம் இயக்கத்தில் உருவாக இருக்கும் புதிய திரைப்படத்தில் அதிதி ஷங்கர் தான் நாயகி என்பது முடிவு செய்யப்பட்டுள்ளது.



தற்போது ஜெயம் ரவி நடித்து வரும்பிரதர்என்ற படத்தை ராஜேஷ் எம் இயக்கி முடித்துள்ள நிலையில் இந்த படத்தை மே மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளார். இதனை அடுத்து அவர் இயக்கும் இருக்கும் புதிய திரைப்படத்தில் அதர்வா நாயகனாக நடிக்க இருப்பதாகவும் அதிதி ஷங்கர் நாயகியாக நடிக்க இருப்பதாகவும் இதில் சத்யராஜ் உள்பட ஒரு சில முக்கிய நடிகர்கள் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இயக்குனர் ராஜேஷ் எம் இயக்கத்தில் உருவான முதல் படமானசிவா மனசுல சக்திபடத்தின் இரண்டாம் பாகம் தான் இந்த படம் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பை வரும் மே மாதம் தொடங்க இருப்பதாகவும் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிகிறது.

இந்த படத்தை தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பதும் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement