• May 04 2024

காஸ்ட்யூம் டிசைனருடன் ரூமில் குத்தாட்டம் போட்ட அதிதி ராவ்- சித்தார்தை கழட்டி விட்டுட்டீங்களா?- விளாசி வரும் நெட்டிசன்கள்

stella / 10 months ago

Advertisement

Listen News!

கடந்த 2006ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பிரஜாபதி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் தான் அதிதி ராவ் ஹைதாரி. இதனைத் தொடர்ந்து தமிழில் சில படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு நல்லதொரு அடையாளத்தை ஏற்படுத்தியது கார்த்தி நடிப்பில் வெளியான காற்றுவெளியிடை திரைப்படம் தான்.

தொடர்ந்து செக்கச் சிவந்த வானம், சைக்கோ மற்றும் ஹே சினாமிகா உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ள அதிதி ராவ் நடிகர் சித்தார்த் உடன் கடந்த 2021ல் மகா சமுத்திரம் எனும் தெலுங்கு படத்தில் இணைந்து நடித்திருந்தார்.


இதனைத் தொடர்ந்து இருவரும் காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும் அடிக்கடி வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில், காஸ்ட்யூம் டிசைனர் திவ்யக் டிசோஸா என்பவருடன் ரூமில் குத்தாட்டம் போட்ட வீடியோவை தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் இதனைப் பார்த்த ரசிகர்கள் சித்தார்த் உடன் ஆட்டம் போடாமல் காஸ்ட்யூம் டிசைனருடன் அதிதி ஆட்டம் போட்டிருக்கின்றீர்களே என கமெண்ட் செய்த வருவதோடு கலாய்த்தும் வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement

Advertisement