• May 05 2024

அடேங்கப்பா... ரம்பாவின் சொத்து மதிப்பு இத்தனை மில்லியனா..? விஷயமறிந்து வாயைப் பிளக்கும் ரசிகர்கள்..!

Prema / 10 months ago

Advertisement

Listen News!

தமிழ்த் திரையுலகில் ஒரு சமயத்தில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் நடிகை ரம்பா. இவர் ஈ.வி.வி.சத்யநாராயணா இயக்கிய 1993-ஆம் ஆண்டு வெளியான 'ஆ ஒக்கடு அடக்கு' என்ற தெலுங்குப் படத்தின் மூலமாகவே சினிமாத் திரையுலகில் கால் பதித்திருந்தார்.


இருப்பினும் தமிழில் இவரது முதல் படம் 'உழவன்' ஆகும். இப்படம் இவருக்கு பெரியளவில் வெற்றியை பெற்றுக் கொடுக்கவில்லை ஆயினும் இவர் நடித்த இரண்டாவது படம் ஆகிய 'உள்ளத்தை அள்ளித்தா' இவருக்கு வெற்றியையும் புகழையும் அதிகளவில் அள்ளிக் கொடுத்தது.


அதனைத் தொடர்ந்து விஜய், அஜித், சரத்குமார், சத்யராஜ் எனப் பல முன்னணி நடிகர்களுடனும் நடித்து டாப் நடிகைகளில் ஒருவராக முன்னேறியிருந்தார். இவ்வாறாக படங்களில் பிஸியாக வலம் வந்த இவர் 2010-ஆம் ஆண்டில் இலங்கை தமிழரான இந்திரன் பத்மநாதன் என்பவரை மணந்து கொண்டு கனடாவின் ரொறன்ரோவில் செட்டில் ஆனார். இவர்களின் சிறந்த நல்வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டாக இந்த தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.


இந்நிலையில் தற்போது நடிகை ரம்பாவின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி இருக்கின்றது. அதாவது இவரின் சொத்து மதிப்பு 3 மில்லியன் டாலர் வரை இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் ரம்பாவின் கணவர் இந்திரகுமார் மேஜிக்வுட்ஸின் தலைமை நிர்வாக அதிகாரியாக (CEO) இருப்பதோடு சென்னையில் தொழிற்சாலை ஒன்றையும் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement