• Jan 19 2025

மீண்டும் சீமான் மீது புகார்... வீடியோ மூலம் எச்சரிக்கை விடும் நடிகை விஜயலட்சுமி... பரபரப்பான தகவல் இதோ...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும் ,நடிகை விஜயலட்சுமிக்கும் இடையிலான பிரச்சினை தொடர்ந்து சில வருடங்களாக நடைபெற்று கொண்டு இருக்கிறது. இந்நிலையில் தற்போது மீண்டும் நடிகை விஜயலட்சுமி வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். 


2008-ம் ஆண்டு மதுரையில் சீமான் தம்மை திருமணம் செய்து கொண்டார். பெரியவர்கள் ஆசீர்வாதத்துடன் மதுரை ஹோட்டலில் சாந்தி முகூர்த்தம் நடந்தது. 3 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்கு பின் சீமான் ஏமாற்றிவிட்டார் என 2011-ம் ஆண்டு சீமான் மீது நடிகை விஜயலட்சுமி சென்னை போலீசில் புகார் கொடுத்திருந்தார்.


அதன் பிறகு சீமான்-விஜயலட்சுமி இருதரப்பும் சமாதானமான நிலையில் புகாரை விஜயலட்சுமி திரும்பப் பெற்றார். இதன்பின்னர் சீமான் மீது பல்வேறு புகார்களை வீடியோ பதிவுகள் மூலம் கூறி வந்தார் விஜயலட்சுமி. சென்னையில் தங்கி இருந்த போது தற்கொலைக்கும் விஜயலட்சுமி முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 


பின்னர் தமிழ்நாட்டில் இருந்து பெங்களூர் சென்ற விஜயலட்சுமி, சீமானை பழிவாங்குவதாக வீடியோ பதிவிட்டு வந்தார். இந்த நிலையில்  நடிகை விஜயலட்சுமி  வீடியோ பதிவொன்றினை வெளியிட்டுள்ளார்.அதில்  விஜயலட்சுமி கூறியதாவது, 


நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக 12 ஆண்டுகளாக தமிழகத்தில் போராடி தீர்வு கிடைக்கவில்லை அதனால் கர்நாட்டக்காவில் வழக்கு தொடுக்க போகின்றேன் என்று விஜயலட்சுமி வீடியோ பதில் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த காணொளி தற்பொழுது பெரும் சர்ச்சைகளை எழுப்பி வருகின்றது.

Advertisement

Advertisement