• Mar 25 2023

தூக்கிட்டுத் தற்கொலை செய்த நடிகை துனிஷா.. காரணமான பிரபல நடிகர் விடுதலை.. கோர்ட் எடுத்த அதிரடி முடிவு..!

Prema / 2 weeks ago

Advertisement

Listen News!

இந்தி சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக இருப்பவர் துனிஷா சர்மா. மராட்டியத்தை சேர்ந்த 20 வயதான இவர் கத்ரீனா கைப், வித்யா பாலன் உள்ளிட்ட பலருடனும் இணைந்து நடித்துள்ளார். அதன் பின்னர் இந்தி சினிமா துறையில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று மென்மேலும் பிரபலமடைந்தார். 


அந்தவகையில் 'அலிபாபா தாஸ்தென் - இ - காபுல்' என்ற வெப்தொடரில் துனிஷா சர்மா கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்னர் கதாநாயகியாக நடித்து வந்தார். இதனையடுத்து துனிஷா சர்மா கடந்த ஆண்டு டிசம்பர் 24-ஆம் தேதி திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். 


அதாவது அலிபாபா தாஸ்தென் - இ - காபுல் வெப்தொடர் படப்பிடிப்பு தளத்தில் அந்த தொடரின் கதாநாயகன் ஷீஷன் கான் மேக்கப் அறையில் தான் துனிஷா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் ஆனது அப்போது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் துனிஷாவும் ஷீஷன்கானும் காதலித்து வந்தது அனைவருக்கும் தெரியவந்தது. 


இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் துனிஷாவின் காதலனான ஷீஷன் கானை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்த தற்கொலை தொடர்பாக 500 பக்க குற்றப் பத்திரிக்கையை போலீசார் கோர்ட்டில் தாக்கல் செய்திருந்தனர்.


இந்நிலையில், சிறையில் உள்ள தனக்கு இந்த வழக்கில் ஜாமின் வழங்கும்படி ஷீஷன்கான் மும்பை வசாய் செசன்ஸ் கோர்ட்டில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்தார். அந்த ஜாமின் மனுவை நேற்று விசாரித்த கோர்ட்டு நடிகர் ஷீஷன்கானுக்கு ஜாமின் வழங்கியது. அந்தவகையில் 1 லட்ச ரூபாய் பிணையில் ஷீஷன்கானுக்கு கோர்ட்டு ஜாமின் வழங்கியது. 


அதுமட்டுமன்றி அவர் தன் பாஸ்போர்ட்டை கோர்ட்டில் ஒப்படைக்க வேண்டும் என்றும் அனுமதியின்றி வெளிநாடு செல்லக்கூடாது என்றும் கோர்ட் அவருக்கு நிபந்தனை விதித்தது. இந்த நிபந்தனைகளை யாவற்றையும் ஏற்றுக் கொண்டதையடுத்து ஷீஷன்கானுக்கு கோர்ட் ஜாமின் வழங்கியது. ஜாமின் வழங்கப்பட்டதையடுத்து சிறையில் இருந்து நடிகர் ஷீஷன்கான் இன்றைய தினம் விடுதலை செய்யப்பட்டார்.

Advertisement

Advertisement

Advertisement