• May 02 2024

பார்ட்டி பேப்பர் வெடித்ததால் அலறி அடித்துக் கொண்டு ஓடிய நடிகை டாப்ஸி- வைரலாகும் வீடியோ

stella / 9 months ago

Advertisement

Listen News!

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ஆடுகளம் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் தான் டாப்ஸி.முதல் படத்திலேயே, தன்னுடைய எளிமையான அழகாலும், நடிப்பாலும் ரசிகர்களைக் கவர்ந்த இவர் காஞ்சனா, கேம் ஓவர் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கின்றார்.

இருந்தாலும் தமிழில் நல்ல ரீச் கிடைக்காததால் பாலிவூட் சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்ட ஆரம்பித்தார்.. இவர் நடித்த சாண்ட் கி அங்கா,தப்பாட், ராஷ்மி ராக்கெட், தூபார பிளர், போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் தொடர்ந்து கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து நடிப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.


35 வயதான நடிகை டாப்ஸி கடந்த ஆண்டு ஒருவரை காதலிப்பதாக கூறிய நிலையில், இவரின் திருமணம் குறித்து சமீபத்தில் கேள்வி எழுப்பியபோது, இன்னும் நான் கர்ப்பமாக ஆகவில்லை என கூறி அதிர்ச்சி கொடுத்தார். அதாவது கர்ப்பமான பின்பே திருமணம் செய்து கொள்வேன் என்பது போல் தெரிவித்திருந்தார். இந்த சம்பவம் திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அதில் பார்ட்டி பேப்பரை சுழற்றும் போது வெடித்த சத்தத்தை கேட்டு அலறி அடித்துக் கொண்டு ஓடுகின்றார். இந்த வீடியோவை தான் தற்போது அவர் வெளியிட்டுள்ளார் . இந்த வீடியோ வைரலாகி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement