• May 05 2024

அம்மாவின் நினைவு தினத்தை குடும்பத்துடன் இணைந்து கொண்டாடிய நடிகை ஸ்ரீதேவி- வெளியாகிய லேட்டஸ்ட் கிளிக்ஸ்

stella / 9 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் பிரபல குணச்சித்திர நடிகர் விஜயகுமாரின் மகள்களில் ஒருவர் ஸ்ரீதேவி. இவர் குழந்தை நட்சத்திரமாக ஒரு சில படங்களில் நடித்தார். அதன்பின் இவர் நாயகியாக நடித்த பிரியமான தோழி, தித்திக்குதே தேவதையை கண்டேன் உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார்.


இந்நிலையில் கடந்த 2009ஆம் ஆண்டு ராகுல் என்பவரை திருமணம் செய்து கொண்ட ஸ்ரீதேவிக்கு, கடந்த 2016 ஆம் ஆண்டு பெண்குழந்தை பிறந்தது.இந்த குழந்தைக்கு ரூபிகா என பெயர் வைக்கப்பட்டது. திருமணத்திற்கு பின்னரும் ஸ்ரீதேவி ஒருசில தெலுங்கு படங்களில் நடித்தார்.


தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பதிவிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் தற்பொழுது அவருடைய அம்மாவும் மறைந்த நடிகை மஞ்சுளாவின் 10வது மறைந்த தினத்தை கொண்டாடியுள்ளனர். இது குறித்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.


இந்த நினைவு நாளில் அவரது அப்பா விஜயகுமார் மற்றும் சகோதரியின் குடும்பமும் இணைந்து சிறப்பித்துள்ளனர். இது குறித்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருவதைக் காணலாம்.



Advertisement

Advertisement

Advertisement