• May 04 2024

அம்மா பாசத்தை பொழியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை சித்தாரா! இந்த சீரியல் நிச்சயம் ஹிட்டாகுமென எதிர்பார்ப்பு! ப்ரோமோ இணைப்பு

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

சன் டிவியில் புதிதாக ஒளிபரப்பாகவுள்ள சீரியல் தான்  'பூவா தலையா'. தற்போது குறித்த சீரியல் தொடர்பில் சுவாரசியமான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதன்படி, சன் டிவி-யில் புதியதாக தொடங்கப்பட உள்ள சீரியலில் 'புது வசந்தம்' படத்தில் நடித்த பிரபல நடிகை சித்தாரா அம்மா கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த சீரியல் விரைவில் ஒளிபரப்பாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதோடு,  'பூவா தலையா' சீரியலின் தலைப்பே பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சம் இல்லாமல் கதையை நகர்த்திச் செல்லுமென எதிர்பார்க்கப்படுகிறது. 


மேலும், குறித்த சீரியலில் அம்மா கதாபாத்திரத்தில் நடிக்கும் சித்தாரா, 80களில் மலையாளம், தமிழ், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்துள்ளதோடு, தமிழில் புது வசந்தம், புரியாத புதிர், படையப்பா, முகவரி, நட்புக்காக உள்ளிட்ட பல படங்களில் சித்தாரா நடித்து புகழ்பெறுள்ளார்.

அத்துடன்,  'பூவா தலையா' சீரியல் அம்மா பாசத்தை பொழியும் வகையில் இந்த புரோமோவில் உள்ள காட்சிகள் இருப்பதால் இந்த சீரியல் நிச்சயம் ஹிட் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை  'பூவா தலையா' சீரியலில் வேறு எந்த நடிகர்கள் மற்றும் குழுவினர் நடிக்க உள்ளார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

'பூவா தலையா'  கதை இதுதானா?

'பூவா தலையா' சீரியலின் கதை குறித்து வட்டாரங்கள் தெரிவிக்கையில்இ  ஒரு சின்ன நகரத்தைச் சேர்ந்த இளைஞன் ஒரு மாநகரப் பெண்ணைக் காதலிப்பதைச் சுற்றியே கதை நகரும் என்று கூறுகிறார்கள்.

இருப்பினும், அவளது கூச்ச சுபாவமும் தொடர்ச்சியான சூழ்நிலைகளும் அவளை அவனிடம் உணர்வுகளை வெளிப்படுத்துவதைத் தடுக்கின்றன என மிகவும் சுவாரசியமாக செல்லவுள்ளது குறித்த சீரியல்.




Advertisement

Advertisement

Advertisement