• Apr 30 2024

கொட்டும் அருவியில் குடும்பத்துடன் கும்மாளம் போடும் நடிகை சாய் பல்லவி- வைரலாகும் வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என்னும் நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகியவர் தான் சாய் பல்லவி. அதனைத் தொடர்ந்து தாம்தூம் படத்தில் ஒரு சிறிய வேடத்திலும் நடித்திருந்தார்.பின்பு ஃபிடா படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார்.

இதனைத் தொடர்ந்து இவர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய பிரேமம் மலையாள படத்தின் மலர் டீச்சர் கதாப்பாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இது தவிர நாக சைதன்யாவுக்கு ஜோடியாக அவர் நடித்த லவ் ஸ்டோரி, நானி ஜோடியாக ஷ்யாம் சிங்கா ராய் ஆகிய படங்கள் இவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத்தந்தன.


மேலும் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான விராத பர்வம் மற்றும் கார்கி திரைப்படம் விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. சாய் பல்லவியின் நடிப்பு இந்த திரைப்படங்களில் முக்கிய அம்சமாக அமைந்தது.


இந்நிலையில் நடிகை சாய் பல்லவி தன்னுடைய தாயாரின் பிறந்தநாள் கொண்டாட்ட வீடியோ & புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். கொட்டும் அருவியில் குடும்பத்துடன் விளையாடிய பின்னர் கேக் வெட்டி தாயாரின் பிறந்தநாளை உறவினர்கள் முன்னிலையில் கொண்டாடினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 



Advertisement

Advertisement

Advertisement