• May 10 2024

நடிகர்கள் செய்ய தயங்கும் செயலை செய்த நடிகை ராஷ்மிகா-வைரலாகும் வீடியோ..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

இந்தியத் திரையுலகில் சமீபகாலமாக இளைஞர்களின் கனவுக் கன்னியாக வலம் வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் தெலுங்கில் வெளிவந்த அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் தென்னிந்திய அளவில் பிரபலமானவர். இதன்பின் இவர் நடிப்பில் வெளிவந்த 'கீதா கோவிந்தம்' என்ற திரைப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது.

இப்படத்தில் இவர் விஜய்தேவர்கொண்டாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இன்று வரைக்கும் இந்த ஜோடியை தென்னிந்திய சினிமா கொண்டாடிய வண்ணம் தான் இருக்கின்றது. அதுமட்டுமல்லாமல் இப்படத்தில் ப்ரியா என்ற கதாபாத்திரத்தில் தனது சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்டிருக்கின்றார்.

அதனைத் தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வெளிவந்த 'சுல்தான்' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிலும் கதாநாயகியாக அடியெடுத்து வைத்தார் ராஷ்மிகா. அதுமட்டுமல்லாது தற்போது விஜய் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் 'வாரிசு' படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். இப்படம் வருகிற 2023-ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளதாக அதிகாரபூர்வமாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

அது மட்டுமின்றி ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் புஷ்பா 2 படத்திலும் அவர் அடுத்து நடிக்க இருக்கிறார்.மேலும் ராஷ்மிகா பிட்னெஸ் மீது அதிகம் அக்கறை செலுத்தி வருகிறார். அவர் மும்பையில் தினமும் ஜிம் செல்லும் போட்டோக்களும் இணையத்தில் வைரலாகின்றன.

இந்நிலையில் தற்போது அவர் 107 கிலோ வெயிட்டை தூக்கி இருக்கும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.மேலும் அதை பார்த்து ரசிகர்கள் பிரமித்து இருக்கின்றனர். அவரை பாராட்டியும் வருகின்றனர்.

107 கிலோ வெயிட்டை கஷ்டப்பட்டு தூக்கும் அவர் அதன் பிறகு மகிழ்ச்சியில் துள்ளிகுதிக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதோ.. 




Advertisement

Advertisement

Advertisement