• May 19 2024

அன்னையர் தினத்தில் தனது அம்மாவுக்கு விலையுயர்ந்த பொருளை பரிசளித்த நடிகை ராஷி கன்னா

stella / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ராஷி கன்னா. இவர் தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றார். ஹிந்தி சினிமாவிலும் மெட்ராஸ் கபேயில் என்ற திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்தவர்.

தமிழில் இமைக்கா நொடிகள் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகிய இவர் இப்படத்தில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து அடங்கமறு,அயோக்யா, சங்கத்தமிழன், துக்ளக் தர்பார், அரண்மணை 3 ஆகிய படங்களிலும் நடித்து இருக்கின்றார்.

இது தவிர தற்பொழுதும் பல திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வரும் இவர் இன்று அன்னையர் தினம் என்பதால் தனது அம்மாவுக்கு வாழ்த்து கூறி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கிறார்.

இந்நிலையில் ராஷி தனது அம்மாவுக்கு பல கோடி மதிப்புள்ள ஒரு சொகுசு காரை வாங்கி பரிசளித்து இருக்கிறார். அதன் போட்டோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement