• Jun 26 2024

ரோட்டுக்கடையில் பிரபல ஹீரோவுடன் இணைந்து பிரியாணி பார்சல் வாங்கிய நடிகை ஜஸ்வர்யா

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனது எதார்த்த நடிப்பாலும், பேச்சாலும் பல ரசிகர்களை கவர்ந்துள்ள நடிகையாக வலம் வருபவர் தான் ஐஸ்வர்யா ராஜேஷ்.தனது கதாபாத்திரத்தை உணர்ந்து நடிப்பதில் வல்லவரான இவர் குடும்பபபாங்கான கதாப்பாத்திரங்களைத் தெரிந்தெடுத்து நடித்து வருகின்றார்.

சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான சுழல் வெப் சீரிஸ் ரசிகர்கள் மதியில் நல்ல வரவேற்பை பெற்றது.அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான இந்த வெப் தொடரில் தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்

இதனைத் தொடர்ந்து தி கிரேட் இந்தியன் கிச்சன் vன்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

அது மட்டும் இல்லாமல் மோகன்தாஸ், தீயவர் குலைகள் நடுங்க, துருவ நட்சத்திரம்,போன்ற படங்களிலும் நடித் வருகின்றார். சமீபத்தில் ஆக்ஷன் காட்சிகளுடன் நிறைந்த டிரைவர் ஜமுனா திரைப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியானது.கொலைகார கும்பலிடம் சிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் எப்படி தப்பிக்கிறார் என்பது தான் படத்தின் கதை.

இந்த நிலையில் தற்பொழுது புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது ஐஸ்வர்யா ராஜேஷும், காமெடி நடிகரான ரோபோ ஷங்கரும் தங்களுக்கு பிடித்த ரோட்டுக்கடையில் பிரியாணி சாப்பிட ஆசைபடுகின்றனர். உடனே காரை விட்டு இறங்கி மாஸ்க் அணிந்து கொண்டு ரசிகர்களுக்கு தெரியாதவாறு பிரியாணி பார்சல் வாங்குகின்றனர்.

அதிலும் ரோபோ ஷங்கர் லெக் பீஸ் கேட்பது தான் ஹை லைட். பார்சல் வாங்கி கொண்டு இருவரும் காரில் ஏறி செல்லும் வீடியோ ரசிகர்களிடையே வைரலாகி வருவதையும் காணலாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement