தமிழில் தனுஷுடன் மாப்பிள்ளை என்ற படத்தின்மூலம் என்ட்ரி கொடுத்தவர் தான் ஹன்சிகா. இவர் இதனைத் தொடர்ந்து விஜய், சூர்யா, கார்த்தி ஜெயம் ரவி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.அந்த வகையில் இவரது நடிப்பில் இறுதியாக மஹா என்னும் திரைப்படம் வெளியாகியிருந்தது.
மஹா படம் ஹன்சிகாவிற்கு 50வது படமாக அமைந்தது. இந்தப் படத்தில் ஹன்சிகாவுடன் சிம்பு ஜோடி சேர்ந்து நடித்திருந்தார். இந்தப் படம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வெளியானது.இந்தப் படம் திரில்லர் பாணியில் எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது பாரிஸில் விடுமுறைக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளார் ஹன்சிகா. பாரஸின் முக்கிய இடங்களில் புகைப்படம் எடுத்து அதை தனது இன்ஸ்டாகிராமிலும் பதிவிட்டு வருகிறார். இந்தப் புகைப்படங்கள் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.
பாரிஸின் ஈபிள் டவர், போஞ்சோர் உள்ளிட்ட இடங்களில் சுற்றி வருகிறார் ஹன்சிகா. வெள்ளை நிற கவுனில் இந்தப் புகைப்படங்களை எடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் வைரலாகி வருவதைக் காணலாம்.
Listen News!