தமிழ் சினிமா வட்டாரத்தில் தற்போதைய பரபரப்பாக பேசப்பட்டு வரும் விவகாரம், இசைஞானி இளையராஜா மற்றும் நடிகை-தயாரிப்பாளர் வனிதா விஜயகுமார் இடையே எழுந்துள்ள பாடல் காப்புரிமை பிரச்சனையாகும். வனிதா தயாரித்த “மிஸ்டர் & மிஸஸ்” திரைப்படத்தில், இளையராஜா இசையமைத்த ஒரு பழைய பாடலை பயன்படுத்தியுள்ளார். இதனை இசை அமைப்பாளர் எதிர்த்து, “பாடல் உரிமை எனக்கு மட்டுமே உள்ளது” என சட்ட நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.
இந்நிலையில், மூத்த நடிகை ஷர்மிலா, இந்த விவகாரத்தில் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். “ஒரே ஒரு போன் செய்து, ஆசீர்வாதம் கேட்டிருந்தாலே போதுமாயிருந்தது. ஆனால், பர்மிஷன் இல்லாமல் பாடல் பயன்படுத்தப்பட்டது தான் இப்போதைய பிரச்சனைக்கான காரணம்,” என அவர் தெரிவித்துள்ளார்.
ஷர்மிலா மேலும் கூறுகையில், “முதலில் ஆசீர்வாதம் வாங்கினேன் என்பதே சொன்னார் வனிதா. இப்போது பர்மிஷன் வாங்கினேன் என்கிறார். இது முன்-பின் முரண்பாடாக உள்ளது. இசைஞானி நேரில் இருந்திருந்தால், ‘யூஸ் பண்ணாதீங்க’ என்று கூறியிருப்பார்,” என்றும் கூறினார். அந்த பாடல், கதையின் மிக முக்கியமான ஒரு பிளவு ஏற்படும் காட்சியில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும், அது வெறுப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருப்பதால் தான், இளையராஜா தரப்பில் கடும் எதிர்வினை ஏற்பட்டுள்ளதாகவும் ஷர்மிலா கூறியுள்ளார்.
இதே நேரத்தில், வனிதா “சோனி மியூசிக்கிடமிருந்து உரிமை பெற்றேன்” என தெரிவித்துள்ளதையும், ஆனால் இளையராஜா தரப்பு “சோனிக்கு உரிமை இல்லை” என நீதிமன்றத்தை நாடியுள்ளதையும் குறிப்பிடலாம்.
Listen News!