பிரேமலு புகழ் நஸ்லீன் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள மலையாள திரைப்படம் ‘லோகா’ வெளியான முதல் நாளிலிருந்து ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. டொமினிக் அருண் இயக்கத்தில் உருவான இந்த படத்தில், சாண்டி, சந்து சலிம் குமார், அருண் குரியன் மற்றும் சாந்தி பாலசந்திரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சாண்டியின் வில்லத்தனத்திற்கு தனித்துவமான பாராட்டுகள் கிடைத்துள்ளன. அதேபோல கல்யாணி பிரியதர்ஷனின் மிகச்சிறந்த நடிப்பு, ரசிகர்களிடமும் விமர்சனங்கள் தரப்பிலும் பெருமையாகப் பேசப்படுகிறது. இப்படத்தை பிரபல நடிகர் துல்கர் சல்மான் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
திரைப்படம் வெளியாகி வெறும் 18 நாட்களில், மோகன்லால் நடித்த ‘துடரும்’ படத்தின் மொத்த வசூலை தாண்டியுள்ளது. இதன் மூலம், ‘லோகா’ அதிக வசூல் பெற்ற மலையாள திரைப்படங்களின் பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்திய திருப்தியும், சமூக ஊடகங்களில் எழுந்துள்ள அதிர்வும் இதன் வெற்றிக்கு மிகப்பெரிய காரணமாக உள்ளது.
வசூல் வேகத்தில் தொடர்ந்து முன்னேறி வரும் ‘லோகா’, விரைவில் மோகன்லாலின் ‘எம்புரான்’ படத்தின் வசூல் சாதனையையும் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Listen News!