• May 10 2024

சிறந்த நடிகைக்கான தமிழக அரசைப் பெற்ற நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்- அதுவும் என்ன படத்திற்கு தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அரசு சார்பில் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்படுவது வழமை.இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக விருது வழங்குவது தடைப்பட்டிருந்தாலும் தற்பொழுது மீண்டும் தமிழக அரசு மீண்டும் திரைப்பட விருதுகளை அறிவித்துள்ளது.

அதன்படி கடந்த 2009 முதல் 2014ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகளை அறிவித்தது. இந்த விருது வழங்கும் விழா, தற்போது சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வருகிறது. இதில், காக்கா முட்டை படத்தில் சிறப்பாக நடித்ததற்காக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சிறந்த நடிகைக்கான விருதை பெற்றார்.


இதில்,காக்கா முட்டை படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக ஜஸ்வர்யா ராஜேஷ் நடித்து அசத்தி இருப்பார். இப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக 2014ம் ஆண்டின் சிறந்த படமாக காக்கா முட்டை தேர்வு செய்யப்பட்டு பரிசு வழங்கப்பட்டது. 


இதையடுத்து,பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ், காக்கா முட்டை படத்திற்கு இதுவரை 5 தேசிய விருதுகள் பெற்றிருந்தாலும் தமிழ்நாடு அரசின் விருது பெறுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என அவர் பெருமிதத்துடன் கூறியுள்ளார். மேலும், இப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த விக்னேஷ் மற்றும் ரமேஷ் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதை வென்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement

Advertisement