• Feb 22 2025

அரசியல் என்றி கொடுத்த நடிகர் விஜய்... 2026ல் தேர்தல் முடிவு... வாழ்த்து தெரிவித்த ஆண்டவர்...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் நேற்று "தமிழக வெற்றி கழகம்" என்ற தனது அரசியல் கட்சியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில் ஒரு பக்கம் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து கொண்டிருக்கின்றது.


இன்னொரு பக்கம் ஒரு சிலர் நெகட்டிவ்வாக கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர். இருப்பின்னும் ரசிகர்கள் இந்த செய்தியை கொண்டாடிக்கொண்டு இருக்கிறார்கள். இந்நிலையில் நடிகர் விஜய் அவர்களுக்கு நடிகர் கமல் இவ்வாறு வாழ்த்து தெரிவித்துள்ளார். 


விஜய்யின் அரசியல் வருகை குறித்து நாம் தமிழர் கட்சியின் சீமான் மற்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் தங்கள் கருத்துக்களை தெரிவித்திருந்தனர். மேலும் பல சினிமா பிரபலங்கள் இவரின் அரசியல் வருகையை பாராட்டி டுவிட் பதிவுகளும் தெரிவித்திருந்தனர்.


இந்நிலையில் வெளிநாடு சென்றுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் நம்மவர். திரு. கமல்ஹாசன் அவர்கள்,  புதிய அரசியல் கட்சி ஆரம்பித்துள்ள நடிகர். திரு.விஜய் அவர்களுக்கு தொலைபேசி மூலமாக வாழ்த்துக்களை தெரிவித்தார்.இன்று எடுத்துள்ள முடிவுக்கு பாராட்டுக்களும், வரும் 2026-ல் தேர்தலில் பங்கேற்கும் முடிவுக்கு வாழ்த்துக்களும் தெரிவித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. 

Advertisement

Advertisement