• Apr 17 2026

விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்த வந்த போது நடிகர் விஜய் செருப்பால் தாக்கப்பட்டாரா?- நடந்தது என்ன தெரியுமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் கேப்டனாகவே விளங்கியவர் நடிகர் விஜயகாந்த். ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் தமிழ் சினிமாவை தாண்டி தென்னிந்திய மொழிகளிலும் இந்தியிலும் நடித்து வந்தனர். 

ஆனால், கடைசி வரை மற்ற இடமெல்லாம் எதுக்கு நமக்கு தேவையில்லாத விஷயம். நம்ம ரசிகர்களுக்கான நம்ம மக்களுக்கான படங்களை கொடுப்போம் என நடித்தார். அவரது படங்களில் இந்தி நடிகர்களை வில்லன்களாக நடிக்க வைத்து மாஸ் காட்டினார்.


நடிப்பைத் தாண்டி அரசியலிலும் ஈடுபட்டு வந்த இவர், கடந்த சில ஆண்டுகளாக உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட இருந்ததோடு தொடர்ந்து சிகிச்சைகளையும் பெற்று வந்தார்.இருப்பினும் கொரோனாத் தொற்று காரணமாக உயிரிழந்தார். இவரின் உடலுக்கு திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள்.

இந்த நிலையில் நடிகர் விஜய் நேற்றைய தினம்  நேரில் சென்று அஞ்சலி செலுத்தி இருந்தார். இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.இதுவரை பொது இடத்தில் நாம் யாரும் நடிகர் விஜய்யை இப்படி பார்த்ததே இல்லை. அப்படி மனம் உடைந்துபோய் கண்ணீர் விட்டு அழுதார். 


குறிப்பாக இறுதி 10 வினாடிகள் விஜயகாந்தை விஜய் பார்த்துவிட்டு வரும் தரும் மனதை உலுக்கியது. அஞ்சலி செலுத்திவிட்டு அங்கிருந்து புறப்பட்ட விஜய் கூட்ட நெரிசலில் கஷ்டப்பட்டார்.இதில் எங்கிருந்தோ செருப்பு ஒன்று வந்து விஜய்யை தாக்குவது போல் வீடியோ ஒன்று வைரலானது. மேலும் கூட்டத்தில் உள்ள சிலர் விஜய்யை தாக்கியதாகவும் பேசப்படுகிறது.

ஆனால், இது எதுவுமே உண்மையில்லை. அங்கிருந்த விஜயகாந்தின் தொண்டர்கள் அனைவருமே விஜய்யை தளபதி என்று பாசத்துடன் அழைத்தனர். மேலும் நடிகர் விஜய்யை செருப்பால் தாக்கியது போல் பரவும் வீடியோ எடிட் செய்யப்பட்டது  என்றும் கூறப்படுகின்றது.

Advertisement

Advertisement