• May 03 2024

விஜயகாந்த் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறிய நடிகர் விஜய்-தீயாய் பரவும் லெட்டர்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி ஆக்ஷன் ஹீரோக்களில் ஒருவர்  தான் நடிகர் விஜயகாந்த். 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள விஜயகாந்த் தயாரிப்பாளராகவும் பல படங்களை தயாரித்துள்ளார் என்பதும் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. விஜயகாந்த் நடித்த படங்களில் 20க்கும் மேற்பட்ட படங்களில் போலீஸ் கதாப்பாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்தார்.

போலீஸ் கதாப்பாத்திரம் விஜயகாந்துக்கு கச்சிதமாக பொருந்தும். இதனால் போலீஸ் ரோல் என்றாலே இயக்குநர்கள் அணுகும் முதல் ஹீரோ விஜயகாந்துதான். அத்தோடு பல இளம் இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்து அவர்களின் வாழ்க்கையில் விளக்கேற்றி வைத்தவர் விஜயகாந்த்.மேலும்  பல ஏழை எளிய மக்களுக்கு இல்லை என்று சொல்லாமல் வாரிக்கொடுத்த வள்ளல் என்று பெருமைக்கும் சொந்தக்காரர்.


சினிமா, நடிகர் சங்கம், அரசியல் என அவர் தொட்டத்துறையில் எல்லாம் வெற்றிதான். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார் விஜயகாந்த். இது அவரின் ரசிகர்களுக்கு பெரும் சோகத்தையே ஏற்படுத்தி உள்ளது.நடக்க முடியாமலும் தன் வேலையை கூட செய்ய முடியாமலும் உள்ளார்.


இந்நிலையில் நடிகர் விஜயகாந்த் இன்று தனது 70வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு பிரபலங்களும் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் அவருக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். டிவிட்டரில் #HBDகேப்டன்விஜயகாந்த் #HBDCaptainVijayakanth #HBDCaptain #Vijayakanth #HappyBirthdayCaptain என பல ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டாகி வருகின்றன.



இந்நிலையில் நடிகர் விஜய், விஜயகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி எழுதிய கடிதம் தற்போது வைரலாகி வருகிறது. அத்தோடு விஜயகாந்தின் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் விஜய்.


விஜயகாந்துடனான செந்தூரப்பாண்டி படம் விஜய்க்கு நல்ல பிரேக்கை கொடுத்தது. இதனால் விஜயகாந்த் மீது தனி பாசமும் பெரிய மரியாதையும் கொண்டுள்ள விஜய், அவரை அண்ணா என்றே அழைத்து வருகின்றார்.


இந்நிலையில் விஜயகாந்துக்கு, விஜய் எழுதிய கடிதம் என ஒரு கடிதம் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. அதில் அன்பு அண்ணா, உன் பிறந்தநாள்.. அன்பு பிறந்தநாள்... அந்த அன்புக்கு நான் அடிமை.. அன்புத்தம்பி... விஜய் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கடிதத்தை வைரலாக்கி வரும் விஜய் ரசிகர்கள், விஜயகாந்துக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.








Advertisement

Advertisement

Advertisement