• Oct 09 2024

பிக் பாஸ் சீசன் 7 எப்போ ஆரம்பம் தெரியுமா?- வெளியாகிய அதிகாரப்பூர்வ தகவல்

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒவ்வொரு ஆண்டும் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் 7வது சீசன் எப்போது ஆரம்பமாகும் என ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகின்றது.இந்த சீசனில் இரண்டு வீடு என்பதால் எப்படி நிகழ்ச்சி இருக்கப்போகின்றது என்ற ஆர்வம் ரசிகர்களிடம் அதிகமாக உள்ளது.

இதுவரை இந்த நிகழ்ச்சியிலிருந்து மூன்று ப்ரேமோக்கள் வெளியாகியிருந்தன. இறுதியாக வெளியாகிய ப்ரோமோவில் டு ரெண்டு ஆயிட்டா அப்போ ரெண்டு கன்ஃபெஷன் ரூம், ரெண்டு ஸ்விம்மிங்பூல், அப்போ சண்டையும் ரெண்டா என தர லோக்கல் கமல் கேட்க, சண்டையை மட்டும் ஏன் நினைக்கிறீங்க, சந்தோஷமும் ரெண்டாக இருக்கலாமே என பிக் பாஸ் தொகுப்பாளர் கமல் கூறுகிறார்.


 போட்டியாளர்கள் எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகைன்னு சந்தோஷமா இருந்தா யாரு சார் பார்ப்பா பிக் பாஸ் ஷோவை, சண்டை போட்டு அடிச்சிட்டு கிடந்தாதான்ன உங்களுக்கே பஞ்சாயத்து பண்ண வேலை என நெட்டிசன்கள் அந்த புரமோவை பார்த்து நக்கலடித்து வருகின்றனர்.


இப்படியான நிலையில் பிக்பாஸ் சீசன் 7 எப்போது ஒளிபரப்பப்படவுள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி அக்டோபர் மாதம் 1ம் தேதி இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.

Advertisement