• May 12 2024

புதிய சாதனையை நிகழ்த்த இருக்கும் நடிகர் சூர்யா- ஐந்து வேடங்களில் நடித்து அசத்தப் போகின்றாரா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

சூர்யா 42 படத்தில் சூர்யா ஐந்து வேடங்களில் நடித்து இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழ் சினிமாவில் நடிகராக மட்டுமல்லாது சமூக ஆர்வலராகவும் வலம் வருபவர் தான் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் சமீபகாமாக வெளியாகும் திரைப்படங்கள் ரசிகர்களிடையே சூப்பர் ஹிட் வெற்றி பெற்று வருவதோடு வசூலிலும் அள்ளிக் குவித்து வருகின்றது.


மேலும் இவரது நடிப்பில் வணங்கான் வாடிவாசல் சூர்யா 42 ஆகிய திரைப்படங்கள் உருவாகி வருகின்றது.இதில் வணங்கான் திரைப்படத்தின் படப்பிடிப்பானது சில கருத்து வேறுபாடு காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. இதனால் சூர்யா 42 படத்தில் நடித்து வருகின்றார்.


இப்படத்தினை இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கி வருகின்றார்.தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் இந்தி உள்பட 10 மொழிகளில் உருவாகி வரும் இந்த படம் சரித்திர கதையம்சம் கொண்டது என்பதும் இந்த படத்தில் அரத்தர்,   வெண்காட்டார், முக்காட்டார், மண்டாங்கர், பெருமனத்தார் ஆகிய ஐந்து கேரக்டர் இருப்பதாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில் இந்த ஐந்து கேரக்டர்களிலும் சூர்யா தான்  நடித்து வருகிறார் என்பதும் இது ஒரு மிகப்பெரிய சாதனை என்றும் கூறப்பட்டு வருகிறது. சரித்திர திரைப்படத்தில் அதிகபட்சமாக இரண்டு அல்லது மூன்று வேடங்களில் மட்டுமே நடிகர்கள் நடித்துள்ள நிலையில் சூர்யா 5 வேடங்களில் நடிப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

 

Advertisement

Advertisement

Advertisement