மலையாள திரையுலகில் குணச்சித்திர நடிகராக அறிமுகமாகியவர் தான் ரியாஸ்கான். இவர் பிரபல பட தயாரிப்பாளரான ரஷீத் அவர்களின் மகன் ஆவார். தொடர்ந்து குணச்சித்திர வேடங்களில் நடிக்க ஆரம்பித்த இவர் மலையாளத்தில் மட்டுமல்ல தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மொழி படங்களிலும் நடித்துள்ளார் .
தமிழில் எக்கச்சக்கமான படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்திலும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். குறிப்பாக, பாசமான அண்ணனாக பத்ரி படத்திலும், பயங்கர வில்லனாக வின்னர், மாயி, சமுத்திரம், ஆளவந்தான், ரமணா போன்ற படங்களிலும், சமீபத்தில் வெளியான பாஸ்கர் ஒரு ராஸ்கல், பொன்னியின் செல்வன் பாகம் 1 மற்றும் 2, போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். அவரின் கட்டுக்கோப்பான உடம்பிற்க்காக அவருக்கு பெரும்பாலும் வில்லன் கதாபாத்திரங்களே கொடுக்கப்படும்.
தமிழ் சீரியல்களிலும் நடிகர் ரியாஸ் கான் நடித்திருக்கிறார்.சன்டிவியில் ஒளிபரப்பான சித்தி, அண்ணாமலை, நந்தினி, மகராசி, கண்ணான கண்ணே போன்ற சீரியல்களிலும் நடித்திருக்கிறார்.குறிப்பாக சன் டிவியின் நந்தினி தொடரில் திருநங்கையாக நடித்தார் .ரியாஸ் கானின் மனைவி நடிகை உமா ரியாஸ். இவர்கள் காதல் திருமணம் செய்துகொண்டனர்.
இவர்களது காதலுக்கு இருவரின் வீட்டிலும் சம்மதிக்காததால் இருவரும் அவர்களது வீட்டில் இருந்து வெளியேறினார்கள். இருவரும் திருமணம் செய்த காலத்தில், வேலையும் இல்லை பணமும் இல்லை. பணத்தை குறித்த கேள்விகளுக்கு இருவருமே, " பணமே இல்லாம இருந்து இருக்கோம், அதனால பணத்தோட அருமை எங்களுக்கு புரியும் என்றே கூறுவார்கள்" . இவர்களுக்கு ஷாரிக் ஹாசன், சமர்த் ஹாசன் என இரு மகன்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!