• May 09 2024

குழந்தைகளுக்காக திடீரென மொட்டையடித்துக் கொண்ட நடிகர் பிரபுதேவா-அட இது தான் காரணமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

நடன இயக்குநரும் நடிகருமான பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் மை டியர் பூதம். இப்படத்தை .மஞ்சபை, கடம்பன் ஆகிய படங்களை இயக்கிய என்.ராகவன் இயக்கி வருகின்றார்.

காமெடி மற்றும் மாயாஜால கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தை அபிஷேக் பிலிம்ஸ் சார்பில் ரமேஷ் பி பிள்ளை தயாரித்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக நம்மியா நம்பீசன் நடித்துள்ளார். அத்தோடு இப்படத்திற்கு .டி. இமான் இசையமைத்துள்ளதோடு எஸ்.கே.செல்வகுமார்ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.

இப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் மாஸ்டர் அஸ்வந்த் நடித்துள்ளார். இப்படத்தின் திரையரங்கு உரிமையை கைப்பற்றியுள்ள உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம், வரும் ஜூலை 15-ஆம் தேதி இப்படத்தை வெளியிடவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தில் பிரபுதேவா பூதமாக உருவானது எப்படி என்பது குறித்த வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் குழந்தைகளுக்காக பூதம் போன்று அழகான மேக்கப் போடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோ ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement