• Sep 21 2024

கேரளாவைச் சேர்ந்த பிரபல சமையல் கலைஞரைச் திடீரென சந்தித்த நடிகர் கமல்ஹாசன்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி முக்கிய நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் கமல்ஹாசன். இவர் நடிப்பில் தற்பொழுது விக்ரம் என்னும் திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.

இப்படத்தில் கமல்ஹாசனுடன் விஜய் சேதுபதி பகத் பாசில் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படம் வரும் ஜுன் மாதம் 3 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படத்துக்கும் அனிரூத் இசையமைத்துள்ளார். கமல் நடிப்பில் நான்காண்டுகளுக்குப் பிறகு ரிலீஸ் ஆகும் முதல் படமாக விக்ரம் உருவாகி வருகிறது.

படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் ஆகியவை ஒரே நாளில் மே 15 ஆம் தேதி ரிலீஸாக உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த நிகழ்வு சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்போது கமல் பிரபல சமையல் கலைஞரான கேரளாவைச் சேர்ந்த சுரேஷ் பிள்ளையோடு இருக்கும் புகைப்படம் இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. விக்ரம் படத்தில் ஏற்கனவே சமையல் கலைஞரான வில்லேஜ் குக்கிங் சேனல் குழுவினர் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியானதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement