• May 18 2024

விஜய்யுடன் இணைந்து நடித்துள்ள டான் பட இயக்குனர்- எந்த படத்தில் தெரியுமா..? வெளியானது புகைப்படம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

சிவகார்த்திகேயன் நடிப்பில் இன்று உலகம் முழுவதும் வெளிவந்துள்ள டான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குநராக அறிமுகமாகி உள்ளார் சிபி சக்ரவத்தி.

இன்று வெளிவந்துள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. முதல் படம் இவருக்கு வெற்றிகரமாக அமையப்போகின்றது என கூறி வருகிறார்கள்.

இந்நிலையில், இயக்குநர் சிபி சக்ரவத்தி தளபதி விஜய்யுடன் இணைந்து மெர்சல் படத்தில் நடித்துள்ள காட்சியின் புகைப்படம் தற்போது இணையத்தில் கசிந்துள்ளது

இயக்குனர் சிபி சக்ரவத்தி இயக்குநர் அட்லீயின் துணை இயக்குனராக இருந்துள்ளார் என்பதை அறிவோம்.

அதனால், மெர்சல் படத்தில் விஜய் பிரஸ் முன் நின்று பேசும் கிளைமாக்ஸ் காட்சியில் தனது துணை இயக்குநராக பணிபுரிந்த சிபி சக்ரவத்தியை நடிக்க வைத்துள்ளார் அட்லீ.

இதோ அந்த புகைப்படம்..

Advertisement

Advertisement