தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்த நடிகராக வலம் வருபவர் நடிகர் ஜெயம் ரவி. இவர் ஜெயம் என்னும் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இவரது முதல் திரைப்படமே மெகா ஹிட் அடித்து காலம் பேசும் திரைப்படமாக அமைந்தது. அதையடுத்து, மழை, எம். குமரன் சன் ஆஃப் மகாலஷ்மி, சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்பிரமணியம், பேராண்மை, தாம் தூம், எங்கேயும் காதல் உள்ளிட்ட பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றார்.
இவருடைய நடிப்பில் தற்போது பொன்னியின் செல்வன், ஜனகனமன, அகிலன் ஆகிய படங்கள் உருவாகி வருகிறது.
மேலும் இதில், மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பிரமாண்ட படைப்பு பொன்னியின் செல்வன் படத்தை காண ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கிறார்கள்.
இவ்வாறுஇருக்கையில் சமீபகாலமாக முன்னணி நட்சத்திரங்களின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகி வருகிறது.
அந்த வரிசையில் தற்போது நடிகர் ஜெயம் ரவியின் முழு சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, நடிகர் ஜெயம் ரவியின் முழு சொத்து மதிப்பு மட்டுமே சுமார் ரூ. 70 கோடி இருக்கும் என்று தெரிவிக்கின்றனர்.
Listen News!