தமிழ் சினிமாவில் வடிவேலை தொடர்ந்து அதிகம் பேசப்பட்ட ஒரு காமெடி நடிகர் விவேக் ஆவார். பாலசந்தரின் "மனதில் உறுதி வேண்டும்" என்ற திரைப்படதின் மூலம் அறிமுகமாகி பின்பு பல படங்களில் ஹிட் கொடுத்து வந்தார்.
சமீபத்தில் வெளியான தாராளபிரபு என்ற திரைப்படம் கூட பெரிய அளவில் பேசப்பட்டு வந்தது. எவ்வாறு இருப்பினும் இவர் அண்மையில் மாரடைப்பினால் உயிரிழந்தது பெரும் இழப்பாகவே இன்று வரைநினைவு கூறப்படுகிறது. அதற்கு காரணம் விவேக் செய்த சமூக பணிகள் தான்.
திரைப்படங்களில் கூட அவர் செய்யும் ஒவ்வொரு நகைச்சுவையும் ஒரு அரசியல் கருத்தை அல்லது சமூக கருத்தை கூறும் விதமாகவே காணப்படும். படத்தில் மட்டும் இன்றி நிஜத்திலும் பல சமூக சேவைகளை செய்து வந்தார்.
இவரது சேவைகளை பார்த்த அப்துல்கலாம் நேரில் அழைத்து பாராட்டியது மட்டும் இன்றி 1 கோடி மரக்கன்றுகளை நடவேண்டும் என்று ஒரு பொறுப்பையும் கொடுத்திருந்தார். அதை முழுமையாக செய்து முடிக்கும் முன்பே விவேக் உயிரிழந்தார். ஆனாலும் அவர் விட்டுச் சென்ற பணியை அவரது மக்கள் சிறப்பாக தொடர்ந்து வருகிறார்கள்.
இவ்வாறு இருக்கையில் விவேக்கின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி எவருக்கும் தெரியாது என்றுதான் கூறவேண்டும். அவருக்கு தேஜஸ்வினி விவேக் மற்றும் அமிர்த நந்தினி விவேக் என இரு மகள்கள் காணப்படுகின்றனர்.
இந்த நிலையில், விவேக்கின் ஒரு மகளான தேஜஸ்வரி விவேக் என்பவருக்கு மிகவும் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. குறித்த புகைப்படங்கள் வைரலாகி வரும் நிலையில் பல சினிமா பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தேஜஸ்வினி - சீரஞ்சீவி பரத் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களின் திருமணத்தில் கலந்து கொண்டவர்களுக்கு விவேக்கின் கொள்கையை ஊக்குவிக்கும் விதமாக மரக்கன்றுகள், மூலிகை பூச்செடிகள் போன்றவை வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Listen News!