• Jan 19 2025

விஜய் அரசியலில் தேறவே மாட்டார். பெத்த அப்பா எஸ்.ஏ.சியின் சாபம் ஏன்?

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

புஸ்ஸி ஆனந்த்தை  பக்கத்தில் வைத்திருக்கும் வரை விஜய் அரசியலில் தேற மாட்டார் என்றும் அவரை விட்டு விலகி இருந்தால் மட்டுமே விஜய்யால் அரசியலில் வெற்றி பெற முடியும் என்றும் விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ சந்திரசேகர் சமீபத்தில் பேட்டி அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை நடிகர் விஜய் தொடங்கிய நிலையில் அந்த கட்சி 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் விஜய்யின் அரசியல் ஆலோசகராக அவரது ரசிகர் மன்றத்தின் பொதுச்செயலாளரான புஸ்ஸி ஆனந்த் இருந்து வரும் நிலையில் அவர் குறித்து ஏற்கனவே பல சர்ச்சைக்குரிய தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. 



இந்நிலையில் விஜய்யின் அப்பாவும் இயக்குனருமான எஸ்.ஏ சந்திரசேகர் சமீபத்தில் அளித்த பேட்டியில் புஸ்ஸி ஆனந்த் ஒரு மிகப்பெரிய நடிகர் என்றும் விஜய்க்காக உழைப்பது போன்று அவர் நாடகம் நடித்துக் கொண்டிருக்கிறார் என்றும் அவரை நம்பி விஜய் ஏமாந்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

புஸ்ஸி ஆனந்த்தை பக்கத்தில் வைத்துக் கொண்டு விஜய் அரசியல் செய்தால் அவரது அரசியல் எதிர்காலம் என்னவாகும் என்ற பயம் எனக்கு ஒரு தந்தையாக இருக்கிறது என்றும் விஜய் அவரை விட்டு விலகி இருந்தால் மட்டுமே அரசியலில் சாதிக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். 

புஸ்ஸி ஆனந்த் தனக்கென ஒரு ஆன்லைன் குரூப்பை வைத்துக்கொண்டு பில்டப் செய்கிறார் என்றும் அவரது நடிப்பை விஜய் நம்பி கொண்டிருப்பதால் விஜய் அரசியலில் தேற மாட்டார் என்றும் அவர் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement