• May 05 2024

கேங்ஸ்டார் கெட்டப்பில் வித்தியாசமான ஸ்டைலில் நிற்கும் நடிகர் தனுஷ்-மரண மாஸ் அப்டேட்டாக இருக்கே

stella / 1 year ago

Advertisement

Listen News!

கடந்த ஆகஸ்ட் மாதம் 18ம் திகதி திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகிய திரைப்படம் தான் திருச்சிற்றம்பலம் .இப்படத்தை இயக்குநர் இயக்குநர் மித்ரன் ஜவஹர் இயக்கியுள்ளதோடு சன்பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்திருந்தது.

இப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக ப்ரியா பவானி சங்கர்,நித்யா மேனன், ராக்ஷி கண்ணா ஆகியோர் நடித்துள்ளனர்.இப்படம் விமர்சன ரீதியாக மட்டுமல்லாது வசூல் ரீதியாகவும் அள்ளிக் குவித்தது. இப்படத்தை அடுத்து இயக்குநர் செல்வராகன் இயக்கத்தில் நானே வருவேன் படத்தில் நடித்து வருகின்றார்.


இப்படம் செப்டம்பர் மாதம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.இப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக இந்துஜா நடித்து வருகின்றார். அத்தோடு இப்படத்தில் இன்னுமொரு ஹுரோயினாக ஸ்வீடன் நடிகை Elisabet Avramidou Granlund நடித்துள்ளார்

இந்நிலையில் ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ்,தனுஷூடன் தான் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தில் தனுஷ் நீண்ட முடி மற்றும் தாடியுடன் புதிய லுக்கில் காட்சியளிக்கிறார். இந்த புகைப்படம் தற்போது தனுஷ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தனுஷ் தற்போது வாத்தி மற்றும் கேப்டன் மில்லர் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.





Advertisement

Advertisement

Advertisement