• Aug 20 2026

புதிய தொடரில் களமிறங்கிய நடிகர் அருண் பிரசாத்.. ஆனா இப்படியொரு கேரக்டரா.? ப்ரோமோ இதோ

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இரண்டு முக்கிய சீரியல்கள் விரைவில் நிறைவடைய உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக நீண்ட காலமாக ரசிகர்களின் ஆதரவை பெற்று வந்த மகாநதி சீரியல் முடிவுக்கு வருவது பலருக்கும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

குடும்ப பாசம், உறவுகளின் உணர்வுகள் மற்றும் விறுவிறுப்பான கதைக்களம் மூலம் ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்த இந்த தொடர், தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 

சில நாட்களுக்கு முன்பே இறுதி நாள் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், படப்பிடிப்பு தளத்தில் நடிகர், நடிகைகள் பலரும் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டதாக கூறப்படுகிறது. அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து ரசிகர்களும் எமோஷனலாக பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர்.

இதற்கிடையில் சமீபத்தில் தொடங்கப்பட்ட கனா கண்டேனடி சீரியலும் முடிவுக்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த முடிவு சீரியல் குழுவினருக்கே எதிர்பாராத ஒன்றாக இருந்ததாக கூறப்படுவதால் ரசிகர்கள் மத்தியில் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.


இந்நிலையில், விஜய் டிவி தனது புதிய காதல் கதைகள் தொடரை அறிமுகப்படுத்தும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. 'காதல் காதல் காதல்' என்ற தலைப்பில் வெளியான புரொமோக்கள் ஏற்கனவே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. 

மூன்று விதமான காதல் கதைகளை மையமாகக் கொண்டு உருவாகும் இந்த புதிய முயற்சியை இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் அறிமுகப்படுத்த, நடிகர் மிர்ச்சி செந்தில் அவற்றை விவரிக்கும் வகையில் புரொமோக்கள் வெளியாகி வருகின்றன.

முதல் இரண்டு காதல் கதைகளின் அறிமுகம் வெளியாகிய நிலையில், தற்போது மூன்றாவது கதையின் புரொமோவும் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது. இதில்அருண் பிரசாத் நாயகனாக நடித்துள்ள நிலையில், பெண்களை மதிக்கும் தனித்துவமான இளைஞரின் காதல் பயணமே இந்த கதையின் மையமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருபுறம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த சீரியல்கள் விடைபெற தயாராகிக் கொண்டிருக்க, மறுபுறம் புதிய காதல் கதைகள் வரிசையாக அறிமுகமாகி வருவது விஜய் டிவி ரசிகர்களிடையே கலவையான உணர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. புதிய தொடர்கள் அந்த வெற்றிடத்தை நிரப்புமா என்பது விரைவில் தெரியவரும்.

Advertisement

Advertisement