• Apr 01 2023

நியூசிலாந்தில் பாத்ரூம் கழுவிய அப்பாஸ்.. அட பாவமே.. இவருக்கா இப்படி ஒரு நிலை..!

Prema / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் குறிப்பாக 90 களில் பெண்களின் கனவுக் கண்ணனாக வலம் வந்தவர் நடிகர் அப்பாஸ். அந்தவகையில் இவர் 1996ஆம் ஆண்டு 'காதல் தேசம்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர். இதனைத் தொடர்ந்து 'பூச்சூடவா, இனி எல்லாம் சுகமே, படையப்பா, சுயம்வரம், மலபார் போலீஸ், ஹேராம், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், மின்னலே' போன்ற பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.


அப்பாஸ் தமிழ் சினிமாவில் பெரிய நடிகராக வலம் வருவார் என்று பலரும் எதிர்பார்த்த நிலையில் சினிமாவில் இருந்தே காணாமலே போய்விட்டார். இவர் தற்போது நியூஸிலாந்தில் செட்டில் ஆகி குடும்பத்துடன் வசித்து வருகிறார் அப்பாஸ்.


இந்நிலையில் சமீபத்தில் இடம்பெற்ற பேட்டி ஒன்றில் பல விஷயங்களைப் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறுகையில் "சென்னையில் இருந்து என்னுடைய சொத்துக்களை விற்று நியூஸிலாந்தில் செட்டில் ஆனேன். நியூஸிலாந்து வந்த புதிதில் பெட்ரோல் பங்கில் வேலை செய்தேன். அங்கு உள்ள கழிவறைகளையும் சுத்தம் செய்திருக்கிறேன்" என்று கூறியுள்ளார்.  

சினிமாவில் உச்சத்தில் இருந்த நடிகர் பாத்ரூம் கழுவியுள்ளார் என்ற செய்தி அவரின் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement