• Jun 14 2026

அண்ணன் சீமானும் தம்பி விஜய்யும் உள்ளே போகணும்!- சட்டமன்றத் தேர்தல் குறித்து அமீர் கருத்து

shali / 2 months ago

Advertisement

Listen News!

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், நடிகரும் இயக்குநருமான அமீர், அரசியல் களத்தில் உள்ள சீமான் மற்றும் விஜய் குறித்து கூறிய கருத்துக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.


அமீர் பேசும்போது, “காரைக்குடியில அண்ணன் சீமான் ஜெயிக்க வேண்டும் என்பதே என்னுடைய ஆசை. ஜெயிக்க வழிகளைப் பாருங்கள் என்று அவரிடம் சொன்னேன். அதற்கு அவர் நிச்சயம் நான் ஜெயிப்பேன், எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள், மற்றதை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கூறினார்,” என தெரிவித்தார். மேலும், சீமானின் குரல் சட்டமன்றத்தில் ஒலிக்க வேண்டும் என்பது தனது மனமார்ந்த விருப்பம் என்றும் கூறினார்.

அதே நேரத்தில், நடிகர் விஜய்யின் அரசியல் வருகையையும் அமீர் வரவேற்றார். “தம்பி விஜய்யின் குரலும் சட்டமன்றத்தில் ஒலித்தால் எனக்கு மகிழ்ச்சி தான். ஏனெனில் அனைவரும் மக்களுக்காக சேவை செய்ய வந்தவர்கள்,” என்றார்.

இந்த கருத்துகள் தற்போது அரசியல் வட்டாரங்களிலும், ரசிகர்களிடமும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. தேர்தல் சூழலில் இத்தகைய கருத்துகள் புதிய விவாதங்களுக்கு வழிவகுத்துள்ளன.

Advertisement

Advertisement