• May 03 2024

பிரபல நடிகருடன் நடிக்க விமானத்தில் பறந்த அமீர் -பாவனி...இதை யாருமே எதிர்பார்க்கலையே..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் மாஸ் நடிகராக இருப்பவர் தான் அஜித். இவரது நடிப்பில் இறுதியாக எச் வினோத் இயக்கத்தில் வெளியான வலிமை திரைப்படம் வெளியாகியிருந்தது. இப்படத்தைத் தொடர்ந்து மீண்டும் எச். வினோத் இயக்கத்தில்  துணிவு படத்தில் நடித்து வருகின்றார்.

பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.


இறுதிகட்ட படப்பிடிப்பு இம்மாதம் முடிந்துவிடும் நிலையில் துணிவு திரைப்படத்தை பொங்கலை முன்னிட்டு எதிர்பார்த்து வருகின்றனர் ரசிகர்கள். ஆனால் இப்படம் ஜனவரி இறுதியில் வெளியாகும் என கூறப்படுகிறது.

இவ்வாறுஇருக்கையில்  தற்போது கடந்த பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்கள் பாவனி மற்றும் அமீர். காதல் ஜோடிகளாக தற்போது சுற்றி வரும் இவர்களுக்கு அஜித்துடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதாம்.


ஆம், அதன்படி தற்போது பாவனி, அமீர் மற்றும் சிபி சக்ரவர்த்தி மூவரும் விமானத்தில் துணிவு திரைப்பட ஷூட்டிங்கிற்காக செல்லும் புகைப்படம் வெளியாகியுள்ளது. இது அதிகாரபூர்வமான தகவல் என்றும் கூறப்பட்டது.


Advertisement

Advertisement

Advertisement