• Sep 17 2024

பாவனியிடம் கோபப்பட்ட அமீர்..நடந்தது என்ன..? இணையத்தில் தீயாய் பரவி வரும் தகவல்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் காதல் ஜோடிகளாக வலம் வந்து கொண்டு இருப்பவர் அமீர்- பாவனி. இவர்கள் காதலிப்பதாக செய்யும் சேட்டைகள் சமூகவலைத்தளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.இவர் சின்னத்திரையில் ஆரம்பத்தில் ‘ரெட்டை வால் குருவி’ ‘தவணை முறை வாழ்க்கை’ போன்ற சீரியல்களில் நடித்து இருந்தார்.

இதன் பின் இவர் சின்ன இடைவெளிக்கு பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த சின்ன தம்பி என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்து இருந்தார். இந்த சீரியல் மூலம் இவருக்கு மக்கள் மத்தியில் பிரபலம் கிடைத்தது. அதுமட்டும் இல்லாமல் இவர் சில படங்களிலும் நடித்து இருக்கிறார். அத்தோடு , இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு மொழியிலும் நடித்து வருகிறார். இதனிடையே பாவனி கடந்த 2016 ஆம் ஆண்டு பிரதீப் என்ற நடிகரை காதலித்து திருமணம் செய்து இருந்தார். ஆனால், ப்ரதீப் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டார்.

எனினும் அதன் பின் சிறிது காலம் பாவனி மீடியாவில் இருந்து விலகி இருந்தார். தற்போது இவர் சீரியல்களில் நடித்து வருகிறார். சின்னத்திரை பிரபலத்தின் மூலம் தான் பாவனிக்கு பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்து இருந்தது.

இதில் பங்கேற்ற சக போட்டியாளரான அமீருடன் பாவனி காதலில் இருப்பதாக தகவல்கள் உலா வருகிறது. நிகழ்ச்சியின் போதே காதல் பேச்சுக்கள் அதிகம் வெளியான நிலையில், தற்போது இருவரும் ஜோடியாக வெளியே செல்வது புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவது என இருந்து வருகின்றனர்.அமீர் உங்களில் யார் அடுத்த பிரபு தேவா, கிங்ஸ் ஆப் டான்ஸ் போன்ற பிரபல நிகழ்ச்சிகள் மூலம் நடன இயக்குனராக சின்னத்திரையில் வலம் வருபவர்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு, அவ்வப்போது ஒன்றாக சுற்றி வரும் இந்த ஜோடியின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆவது வழக்கம்.பாவனியும் அமீரும் விரைவில் திருமணம் செய்துக் கொள்ளப் போவதாக வதந்திகள் பரவிய நிலையில், ஒருவழியாக இருவரும் பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 2 நடன நிகழ்ச்சியில் ஜோடிகளாக மாறிவிட்டனர். மேலும் இந்த பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 2ல் போட்டியாளராக,வேல்முருகன் - இசைவாணி, ஐக்கி - தேவ்,அபிஷேக் - ஸ்ருதி ,ஹாரத்தி - கணேஷ் ,சுஜா - சிவகுமார் மற்றும் பல பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பட்டய கிளப்பி வருகின்றனர்.

எனினும் இந்நிகழ்ச்சியில் மேடையில் அனைவரது முன்பும் பாவானிக்கு ஐலவ்யூ என அமீர் கூறிய வீடியோ செம வைரல் ஆனது . அதனைத் தொடர்ந்து, அதே நிகழ்ச்சியில் கேள்விக்கு பதிலளிக்கும் டாஸ்க்கில், “எனக்கு அமீர் பிடிக்கும், ஆனால் கொஞ்சம் டைம் வேணும்” என கூறியது வைரல் ஆனது.

இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை கூறி கமெண்ட் செய்து வந்தனர்.இருவரும் காதலிப்பதாக மற்றும் திருமணம் குறித்து அவர்களாக இன்னும் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. இந்நிலையில், தற்போது பாவனி கேண்டில் லைட் டின்னர் சாப்பிடும் போது எடுத்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டு “Humans glow differently when they are treated right and loved properly #feelingloved #happyme” என தெரிவித்து இருக்கிறார்.

இதனால், அவர் மறைமுகமாக காதலை உறுதி செய்து இருக்கிறார் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். அத்தோடு அந்த போட்டோவை எடுத்து அமீர் தானே எனவும் கேட்டு வருகிறார்கள்.மேலும் தொகுப்பாளர் பிரியங்கா அமீர் பாவனி பிரியங்கா இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். அதனை தனது ஸ்டேட்டஸில் ஷேர் செய்து mine என குறிப்பிட்டிருந்தார்.

இதனால், மறைமுகமாக அவர்கள் காதலில் இருப்பதை உறுதி செய்துள்ளதாக நெட்டிசன்கள் பேசி வருகின்றனர். இந்நிலையில், பாவனி ஜாலியாக ஹேர் வாஷ், ஸ்பா என இருக்க, அமீர் பார்த்து டென்ஷன் ஆவதை வீடியோவாக பதிவிட்டிருந்தார்
அதற்கு பதிலளிக்கும் வகையில், பிராக்டிஸ் இன்னும் இருக்குமென கோவமாக பதிவிட்டுள்ளார். இந்த பதிவு செம வைரல் ஆகி வருகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement