• May 04 2024

அட மோகன் இப்படிப் பட்டவரா...? பலருக்கும் தெரியாத மறைந்துள்ள உண்மைகள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 1980களில் தனது சாதுவான முகத்துடன் அறிமுகமாகி பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மனங்களைக் கொள்ளை கொண்ட ஒருவரே நடிகர் மோகன். இவர் அன்றைய பெண்களின் கனவுக் கண்ணன் என்றும் மைக் மோகன் என்றும் வெள்ளி விழா நாயகன் என்றும் கோகிலா மோகன் என்றும் பல பெயர்களால் புகழப்பட்டவர்.

தமிழில் மட்டுமன்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த இவருக்கு 'பயணங்கள் முடிவதில்லை' என்ற படத்திற்காக சிறந்த நடிகருக்கான ஃபிலிம்பேர் விருது கிடைத்திருக்கிறது.அதுமட்டுமன்றி அதனைத் தொடர்ந்து நடித்த பல படங்களில் பல விருதுகளையும் வென்றிருக்கின்றார்.


இவரின் படங்கள் குறித்து பலரும் அறிந்திருப்பார்கள். ஆனால் இவரைப் பற்றிப் பலருக்கும் தெரியாத ஒரு சில நிஜ உண்மைகளை உண்டு. அதாவது இவரின் திரையுலக ஆரம்பம் பற்றிப்  பார்த்தால், நடிகர் மோகன் அவர்களின் தந்தை உடுப்பியில் பிரபலமான ஹோட்டல் ஒன்றை நடத்தி வந்துள்ளார். தனது ஹோட்டலுக்கு சாப்பிட வந்த நாடகத்துறையை சேர்ந்த திரு பி.வி.கரந்த் என்பவருக்கு மோகனை பார்த்த உடனே பிடித்துப் போனதால் இவரை நாடக நடிகராக அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

இதன் பின்னர் மோகனின் நாடக திறமையை பற்றி அறிந்த இயக்குநர் பாலுமகேந்திரா தனது 'கோகிலா' என்ற படத்தின் மூலம் இவரை சினிமாவில் அறிமுகம் செய்திருக்கிறார். அப்பட வெற்றியைத் தொடர்ந்தே இவர் 'கோகிலா மோகன்' என்றழைக்கப்பட்டார். அதுமட்டுமன்றி இவர் மைக் பிடித்துப் பாட்டுப் பாடி நடித்தாலே அப்படம் ஹிட் என்பதால் பெரும்பாலும் பாடகராகவே நடித்து 'மைக் மோகன்' என்ற பெயரையும் பெற்றார்.

அத்தோடு மோகன் நடித்த எல்லா படங்களிலும் மோகனின் அந்த அற்புதமான குரலுக்கு சொந்தக்காரராக இருந்தவர் நடிகர் விஜய்யின் தாய்மாமனும் பாடகருமான திரு எஸ்.என். சுரேந்திரன் என்பவர் தான். மேலும் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் வசனம் எழுதி வெளிவந்த 'பாசப்பறவைகள்' என்ற படத்தில் மட்டும் மோகன் தனது சொந்தக் குரலில் பேசி நடித்தார்.

இன்னொரு விடயம் என்னவெனில் மோகனின் 74 படங்களுக்கு குரல் கொடுத்த சுரேந்தரும், இவரும் இதுவரை ஒருநாள் கூட பேசிக்கொண்டதே இல்லை என்பது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு உண்மையாக இருக்கின்றது. ஹீரோவாக அறிமுகமாகி தனது நடிப்பை வெளிப்படுத்தத் தொடங்கிய இவர் முதல் மூன்று வருடங்களில் தொடர்ந்து 300 நாட்கள் ஓடிய 3 வெற்றிப்படங்களை கொடுத்தமையால் 'ஹீரோ மோகன்' என்ற பெருமையையும் பெற்றார்.

அதுமட்டுமல்லாது திரையுலகில் ஒரே வருடத்தில் 19 படங்களில் தினமும் 18 மணி நேரம் நடித்து ஒரே நாளில் 3 படங்கள் வெளியாகி வெற்றிவிழா கொண்டாடிய நாயகனும் இவரே. இவரின் பல படங்கள் வெள்ளிவிழா கண்டாலும் எந்த ஒரு கொண்டாட்டமும் இல்லாமலே வாழ்ந்திருக்கின்றார். தன்னுடைய பிறந்தநாளை கூட கொண்டாடாமல் எளிமையாகத் தான் வாழ்ந்துள்ளார்.

இவரைப் பற்றிய இன்னொரு சுவாரஸியமான அந்த காலத்தில் சாக்லெட் பாயாக வலம் வந்த மோகனை திருமணம் செய்ய பல நடிகைகள் போட்டி போட்டுள்ளனர். அதில் ஒரு நாயகி தன்னுடைய காதலை வெளிப்படுத்த அதை அவர் ஏற்காதமையினால் கோபத்தில் மோகனுக்கு எய்ட்ஸ் என்ற கொடுமையான நோய் உள்ளதாக பரபரப்பிவிட்டு சினிமாவை விட்டு விலகியதாக கூறப்படுகிறது.

இவ்வாறாக சினிமாவின் வெற்றி நாயகனாக வலம் வந்து 1987-ஆம் ஆண்டு கௌரி என்பவரை திருமணம் செய்துகொண்ட நடிகர் மோகனுக்கு ஆகாஷ் என்கிற ஒரு மகன் உள்ளார். இவர் ஹீரோவாக புகழின் உச்சியில் இருந்தபோதே 'விதி' என்ற படத்தில் வில்லன் வேடத்தில் நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கதாநாயகனாக புகழ்பெற்ற இவர் 1999-ஆம் ஆண்டு 'அன்புள்ள காதலன்' என்ற படத்தை இயக்கியதன் மூலம் இயக்குநராகவும் அவதாரம் எடுத்திருக்கிறார். அதுமட்டுமல்லாது இவர் திரைத்துறையை விட்டு நீண்டகாலம் விலகி இருந்தபோது 'அச்சம் மடம் நானம்', 'செல்வங்கள்' போன்ற தொலைக்காட்சி தொடர்களை தயாரித்ததோடு பல சமூக சேவைகளையும் ஆற்றி வந்திருக்கின்றார்.

இவ்வாறாக நடிகர் மோகன் பற்றி யாருக்கும் தெரியாத பல உண்மைகள் பொதிந்திருக்கின்றன.

Advertisement

Advertisement

Advertisement