• May 12 2024

வெள்ளை சட்டை போட்டால் நீ ஒன்னும் டான் ஆகிட முடியாது - விக்ரமனிடம் சுயரூபத்தை வெளிக்காட்டிய அசீம்

stella / 1 year ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ் சீசன் 6. இந்த நிகழ்ச்சியானது ஆரம்பிக்கபட்ட நாளிலிருந்து விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது. இதில் மொத்தமாக 21 போட்டியாளர்கள் பங்குபற்றியுள்ளனர்.

 பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி இரண்டு வாரங்கள் ஆகும் நிலையில் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் செல்கிறது.நேற்றைய எபிசோடில் தன்னை பெரியம்மா, ஆன்ட்டி என அழைத்த அசல் கோளாறை வெளுத்து வாங்கினார் தனலெட்சுமி. 


தனலெட்சுமியை சக ஹவுஸ்மேட்ஸ் சமாதானம் செய்தனர். அப்போது என்ன பிரச்சனை என விசாரிக்க வந்த விக்ரமனுக்கு அசீம், ஏடிகே மற்றும் ஜிபி முத்து ஆகியோருடன் பிரச்சனை ஏற்பபட்டது.இந்நிலையில் இன்றைய ப்ரோமோவில் பிக்பாஸ் வீட்டில் ரேங்கிங் டாஸ்க் கொடுக்கப்பட்டது.

 இதில் பேசிய அசீம் முதல் இடத்தில் நின்ற மகேஸ்வரி, 6 வது இடத்தில் நின்ற விக்ரமன், 9 வது இடத்தில் நின்ற ஆயிஷா ஆகியோருக்கு சுத்தமாக தகுதியே இல்லை என்றார். இதற்கு விளக்கம் கேட்ட ஆயிஷாவை போடி என்று  கூறினார் அசீம்.


தொடர்ந்து வந்த விக்ரமன், என்ன இப்படி பேசுறீங்க என கேட்க, வெள்ளை சட்டை போட்டால் நீ ஒன்னும் டான் ஆயிட முடியாது, போய் வேலைய பாரு என்று அவரிடமும் எகிறுகிறார் அசீம். ஏற்கனவே அசீமுக்கு விக்ரமனை கண்டால் பிடிக்கவில்லை. விக்ரமனிடம் நேருக்கு நேர் பேசாமல் அவாய்ட் செய்து வருகிறார் அசீம். இந்நிலையில் ரேங்கிங் டாஸ்க்கில் நடந்துள்ள பிரச்சனை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.






Advertisement

Advertisement

Advertisement