• May 03 2024

CWC ஷோவில் அடுத்த வாரம் பெரிய கலாட்டாவே நடக்கும் போல.. ஒருவரையொருவர் இழுத்துப் பிடிக்கும் போட்டியாளர்கள்.. வெளிவந்த வீடியோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

ரசிகர்கள் பலரும் விரும்பி பார்க்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று தான் 'குக் வித் கோமாளி'. இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக பிரபல செஃப்கள் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் ஆகியோர் பங்கேற்று மிகவும் அரட்டை அடித்து அனைவரையும் கலாய்த்துக் கொண்டே இருப்பதால் நிகழ்ச்சி சுவாரஸ்யத்திற்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கின்றது.


நிகழ்ச்சியானது இதுவரை 3 சீசன்களை வெற்றிகரமாக கடந்துள்ள நிலையில், தற்போது இதன் 4-ஆவது சீசனும் ஆரம்பமாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகின்றது. அதுமட்டுமல்லாது ஒவ்வொரு வாரமும் விறுவிறுப்புடன் நகர்ந்த வண்ணம் இருகின்றது.


அந்தவகையில் கடந்த வாரம் கலகலப்பாக சென்ற இந்த நிகழ்ச்சியில் இருந்து ஷெரின் வெளியேறி விட்டார். இது குக் வித் கோமாளி ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இதனை அடுத்து தற்போது அடுத்த வாரத்திற்கான எபிசோட் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது அடுத்த வாரம் கிராமத்து சமையல் எபிசோடு வரப்போகிறது. அப்போது எடுக்கப்பட்ட ஒரு குட்டி வீடியோ தான் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement

Advertisement