• May 02 2024

'தங்கலான்' படப்பிடிப்பில் லீக்கான வீடியோ... நீச்சல் குளத்தில் அரட்டை அடிக்கும் விக்ரம் மற்றும் பா.ரஞ்சித்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ்த் திரையுலகில் முன்னணி வாய்ந்த நடிகர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் விக்ரம். இவர் 1990 ஆம் ஆண்டு வெளியான 'என் காதல் கண்மணி' என்னும் படத்தின் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆனார். அதன் பின்பு ஆகக் குறைந்த பொருட்செலவில் ஆக்கப்பட்ட படங்களில் மட்டுமே நடித்து வந்துள்ளார்.


ஆனால் இவர் நடிக்க தொடங்கி ஒன்பது வருடங்களுக்குப் பின் வெளிவந்த 'சேது' என்ற படத்தின் மூலம் திரையுலக ரசிகர்கள் பலரின் கவனத்தை தன் பக்கம் திருப்பினார். இப்படமே இவரின் திரை வாழ்க்கையை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு சென்றது எனக் கூறலாம். இதனைத் தொடர்ந்து இவருக்குப் பல பட வாய்ப்புக்கள் வந்து குவியத் தொடங்கின.

அந்தவகையில் விக்ரம் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் 'தங்கலான்'. பா. ரஞ்சித் இயக்கும் இப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார் விக்ரம். அத்தோடு இவரோடு இணைந்து மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி என பல நட்சத்திரங்களும் இணைந்து இப்படத்தில் நடிக்கிறார்கள்.


ஆனால் மாளவிகா மோகனன் படத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில் தான் தங்கலான் படப்பிடிப்பின் இடைவேளையில் விக்ரம், பா. ரஞ்சித் மற்றும் சில நடிகர்கள் நீச்சல் குளத்தில் அரட்டை அடிக்கும் வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

இந்த வீடியோவை தற்போது ரசிகர்கள் இணையத்தில் அதிகம் வைரலாக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதோ அந்த வீடியோ..!


Advertisement

Advertisement

Advertisement