• May 19 2024

ஆலியா பட்டிற்கு எதிராக கிளம்பிய புதிய சர்ச்சை- திட்டித்தீர்க்கும் ரசிகர்கள்…!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

BoycottAliaBhatt ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து பாலிவுட் ரசிகர்கள் ஆலியா பட்டை ட்ரோல் செய்தும் கண்டபடி பதிவுகளை இட்டு திட்டி வருகின்றனர்.

பெண் இயக்குநர் ஜஸ்மீத் கே ரீன் இயக்கத்தில் ஆலியா பட் நடித்துள்ள டார்லிங்ஸ் படம் வரும் ஆகஸ்ட் 5ம் தேதி நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. சமீபத்தில் வெளியான அந்த படத்தின் டிரைலர் பாலிவுட் ரசிகர்களை குறிப்பாக ஆண்களை பெரும் கோபத்திற்கு ஆளாக்கி உள்ளது. நடிகை ஆலியா பட் தயாரித்து நடித்துள்ள இந்த படத்தை தடை செய்ய வேண்டுமென போராட்டங்கள் வெடித்துள்ளன.

இந்தி திரையுலகின் நம்பர் ஒன் நடிகையாக சமீப காலமாக அசத்தி வருகிறார் ஆலியா பட். மேலும் இந்த ஆண்டு இதுவரை வெளியான அக்‌ஷய் குமாரின் பல படங்கள் செய்ய முடியாத வசூல் சாதனையை ஆலியா பட்டின் கங்குபாய் கத்தியவாடி செய்து அசத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. கமர்ஷியல் மற்றும் கன்டென்ட் என இரட்டை குதிரைகளில் சரியாக சவாரி செய்து வரும் ஆலியா பட்டின் அடுத்த போல்டான படம் இப்படியொரு சிக்கலை சந்தித்து இருக்கிறது.

டொமஸ்டிக் வயலன்ஸ் பெண்களுக்கு கொடுக்கப்பட்டாலும், சரி அது ஆண்களுக்கு கொடுக்கப்பட்டாலும் சரி தவறான ஒன்று தான். எனினும் அதற்கு எதிராக சட்டங்களும் உள்ளன.

இந்நிலையில், ஆலியா பட்டின் டார்லிங்ஸ் திரைப்படத்தில் கணவருக்கு எலி மருந்து கொடுப்பது, கட்டி வைத்து உதைப்பது, நான் இனிமேல் ஃபீல்டிங் பண்ண மாட்டேன், பேட்டிங் ஆடப் போறேன் என மட்டையால் தலையில் அடிப்பது உள்ளிட்ட டொமஸ்டிக் வயலன்ஸ் செய்யும் மனைவி கதாபாத்திரத்தில் ஆலியா பட் நடித்துள்ளது தான் இப்படியொரு பாய்காட் டிரெண்டாக காரணம்.

ஜானி டெப்புக்கு டொமஸ்டிக் வயலன்ஸ் கொடுத்த ஹாலிவுட் நடிகை ஆம்பர் ஹெர்ட்டின் இந்திய வெர்ஷன் தான் இந்த ஆலியா பட் என ஆலியா பட் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள டார்லிங்ஸ் திரைப்படத்தை புறக்கணிக்க பாலிவுட் ரசிகர்கள் போர்க் கொடி தூக்கி உள்ளனர்.

ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் வீட்டில் கொடுமை கொடுப்பது சட்டப்படி குற்றம் அதை ஊக்கவிக்கும் படமாக அமைந்துள்ள ஆலியா பட்டின் டார்லிங்ஸ் படத்திற்கெதிராக அதன் காட்சிகளை பதிவிட்டு Say no to violence என பாலிவுட் ரசிகர்கள் ஆலியா பட்டை விளாசி வருகின்றனர். தொடர்ந்து பாலிவுட் இதே போன்ற விஷயங்களை கையாண்டு வருவதால் தான் அதை ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கிறோம் என்றும் கூறுகின்றனர்.

மேலும் டார்லிங்ஸ் டிரைலர் கட்டிங்ஸை எடுத்துப் போட்டு ஆலியா பட் இவ்வளவு பெரிய கொடுமைக்காரியா என்றும் பாடுபாவி புருஷனை போட்டு எப்படி அடிக்கிறான்னு பாருங்க என்றும் நெட்டிசன்கள் வெளுத்து வாங்கி வருகின்றனர். டார்லிங்ஸ் படத்தை நெட்பிளிக்ஸில் யாரும் பார்க்க வேண்டாம் என்றும், இது போன்ற படங்களை வெளியிடுவதால் தான் நெட்பிளிக்ஸ் இந்தியாவில் நஷ்டம் அடைந்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

மனைவியை கொடுமைப்படுத்தும் கணவனை எப்படியெல்லாம் மனைவி புலியாக மாறி பழி வாங்குகிறாள் என்பது தான் டார்லிங்ஸ் படத்தின் கதை. அத்தோடு ஆண்கள் பெண்ணை அறைந்தால் டாப்ஸி போல கோர்ட்டில் கேஸ் போட்டு பிரிந்து செல்லும் படங்களை எடுக்கும் அதே பாலிவுட்டில், பெண்கள் இப்படி அடித்து சித்தரவதை செய்வதை ஆதரிப்பது தப்பு இல்லையா? என்கிற கேள்வியையும் ரசிகர்கள் முன் வைத்து வருகின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement