• May 12 2024

தனுஷ் மகனுக்கு ஒரு சட்டம்.. நரிக்குறவர் குடும்பத்திற்கு ஒரு சட்டமா..? ரோஹிணி தியேட்டரிற்கு தரமான பதிலடி கொடுக்கும் நெட்டிசன்ஸ்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

கன்னடத்தில் வெளியாகி மெகா ஹிட் படமான 'மஃப்டி' படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக சிம்புவின் 'பத்து தல' படம் உருவாகியுள்ளது. இதில் அவருடன் இணைந்து கௌதம் கார்த்திக், கௌதம் மேனன், ப்ரியா பவானி சங்கர், சென்ராயன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர். 


இந்தப் படமானது உலகம் முழுவதும் இன்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பாசிட்டிவ் விமரசனங்களையும் நல்ல வரவேற்பையும் பெற்று வருகின்றது. இப்படியொரு சூழலில் சென்னை கோயம்பேடு பகுதிக்கு அருகில் இருக்கும் ரோஹினி தியேட்டரில் இன்று காலை முதல் நாள் முதல் காட்சி ரசிகர்கள் பார்வைக்காக திரையிடப்பட்டது


இதில் ரசிகர்களோடு ரசிகர்களாக குறவர் சமுகத்தை சார்ந்த குடும்பத்தினர் தங்களுக்கு பிள்ளைகளுடன் பத்து தல படம் பார்க்க டிக்கெட் எடுத்து தியேட்டருக்குள் செல்ல முயற்சி செய்துள்ளனர். ஆனால் அவர்களிடம் டிக்கெட் இருந்தும் திரையரங்க ஊழியர்கள் அந்த டிக்கெட்டை வாங்காமல் உள்நுழைய அனுமதி மறுத்துள்ளனர்.


இதற்கு பல எதிர்ப்புகள் தியேட்டர் நிறுவனத்தின் மீது வந்தவண்ணம் இருந்தமையினால், ஊழியரின் இந்த நடவடிக்கை குறித்து ரோஹினி தியேட்டர் தற்போது விளக்கம் அளித்துள்ளது. அதாவது அதில் "ஊழியர்கள், வந்தவர்களின் குழந்தைகளுக்கு 2, 6, 8 மற்றும் 10 வயது இருப்பதாலும் படம் U/A சான்றிதழ் பெற்றதால் சட்டப்படி அவர்களை உள்ளே விட அனுமதிக்கவில்லை" என்று கூறியிருந்தனர். 

இதற்கு நெட்டிசன் ஒருவர் தரமான பதிலடி கொடுத்திருக்கின்றார். அதாவது 'தர்பார்' படத்தின் போது தனுஷின் மகனுக்கு 10 வயதிற்குள் தான் இருக்கும். அப்படமும் U/A சான்றிதழ் பெற்ற படம் தான். அவர்களை மட்டும் ரோஹினி தியேட்டர் எப்படி அனுமதித்தது என்று கேட்டுள்ளார்.


மேலும் இவரைப் போலவே ரோஹினி திரையரங்கை நெட்டிசன்கள் வச்சு கலாய்த்து கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள். 

Advertisement

Advertisement

Advertisement