• May 18 2024

படம் வெளியாகி சில மணிநேரத்திலேயே விஜய் ஆண்டனிக்கு காத்திருந்த அதிர்ச்சி- கடும் குழப்பத்தில் படக்குழு

stella / 9 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி முக்கிய நடிகராக வலம் வருபவர் தான் விஜய் ஆண்டனி.இவரது நடிப்பில் வெளியாகிய நான்,சமீர், சைத்தான், எமன், பிச்சைக்காரன் போன்ற திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன.

இது தவிர அண்மையில் இவரது நடிப்பில் பிச்சைக்காரன் 2 திரைப்படம் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.இப்படத்தின் மூலம் இவர் இயக்குநராகவும் அறிமுகமானார்.இந்தப் படம் கலெக்ஷனிலும் அள்ளியது.


இந்த திரைப்படத்தை தொடர்ந்து கொலை திரைப்படம் இன்று வெளியானது. மாடல் அழகியாக மீனாட்சி சௌத்ரி கொலை செய்யப்படுகிறார். இந்த கொலை வழக்கை விசாரிக்கும் அதிகாரியாக ரித்திகா சிங் நியமிக்கப்படுகிறார். ஆனால், கொலை வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லாததால், அதீத துப்பறிவு திறமை கொண்ட விஜய் ஆண்டனி உதவுகிறார்.

இதில் கொலை செய்யப்பட்ட மாடல் அழகியின் பார்வையில் இருந்து விசாரணையை விஜய் ஆண்டனி தொடங்குகிறார். இந்த படத்தில் முதல் முறையாக விஜய் ஆண்டனி நடுத்தர வயதுடைய நபராக பெப்பர் அண்ட் சால்ட் லுக்கில் விஜய் ஆண்டனி நடித்துள்ளார். அடுத்தடுத்த திருப்பங்களுடன் வெளியாகி உள்ள இத்திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.


இந்நிலையில், கொலை திரைப்படம் திரையரங்குகளில் வெளியான ஒரு சில மணி நேரத்திலேயே தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட ஆன்லைன் தளங்களில் லீக்காகி உள்ளது. இந்த செய்தி விஜய் ஆண்டனி ரசிகர்களுக்கும், படக்குழுவுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement