• May 13 2024

இனிமேல் ஆண் துணையே வேண்டாம் என தன்னைத் தானே திருமணம் செய்த பிரபல சீரியல் நடிகை

stella / 1 year ago

Advertisement

Listen News!


வெள்ளித்திரையில் நடித்து வரும் பிரபலங்களைப் போல சின்னத்திரையில் அசத்தி வரும் பிரபலங்களுக்கும் ஏராளமான ரசிகர் பட்டாளம் காணப்படுகின்றனர். அந்த வகையில் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த தொலைக்காட்சி நடிகையாக வலம் வருபவர் தான் கனிஷ்கா சோனி.

இவர் ‘தியா அவுர் பார்த்தி ஹம்’ என்ற சீரியல் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தார்.இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் உள்ளது.இவரின் நடிப்பில் வெளியான இந்த சீரியல் தமிழில் என் கணவன் என் தோழன் என்னும் பெயரில் வெளியானது.


இந்த நிலையில், இவர் தன்னைத் தானே திருமணம் செய்துகொண்டதாக தனது இன்ஸ்டாவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.  அதில், எனக்கு இனிமேல் ஆண் துணையே வேண்டாம், நான் என்னைக் காதலிக்கிறேன். என் கனவுகள் நிறைவேறிவிட்டது. 

அதனால் நான் என்னைத் திருமணம் செய்து கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.இவரின் இந்தச் சம்பவம் ரசிகர்களை மிகவும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement