• May 07 2024

விஜய்யின் ஹிட் படத்தினுடைய காப்பி தான் வெந்து தணிந்தது காடு திரைப்படம்- அடடே இவ்வளவு நாள் இது தெரியாமல் போச்சே

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய்யின் நெஞ்சினிலே திரைப்படத்தின் காப்பி தான் வெந்து தணிந்தது காடு திரைப்படம் என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

மாநாடு படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னர் சிம்பு நடிப்பில் வெளியாகி உள்ள படம் வெந்து தணிந்தது காடு.கௌதம் மேனன் இயக்கியுள்ள இப்படத்தில் நடிகர் சிம்பு 20 வயது இளைஞனாக நடித்துள்ளார். இதற்காக 15 கிலோ உடல் எடையை சிம்பு குறைத்து நடித்திருக்கிறார். 


இப்படத்தில் கதாநாயகியாக  இளம் நடிகை சித்தி இத்னானி நடித்துள்ளார். ராதிகா சிம்புவின் தாயாக நடித்திருக்கின்றார்.ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்துக்கு சித்தார்த் ஒளிப்பதிவு செய்துள்ளார்.தமிழகத்தை சேர்ந்த இளைஞன் வேலைக்காக மும்பை சென்று, அங்கு எப்படி டான் ஆகிறார் என்பதே இப்படத்தின் கதைக்கருவாக அமைந்துள்ளது. 

நேற்று திரையரங்குகளில் ரிலீசான இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக சிம்புவின் நடிப்பு வேறலெவலில் உள்ளதாக அனைவரும் பாராட்டி வருகின்றனர். இப்படத்தின் கதை தற்போது வாழ்ந்து வரும் ஒருவரின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவம் என எழுத்தாளம் ஜெயமோகன் சமீபத்திய பேட்டியில் கூறி இருந்தார்.


இந்நிலையில், இப்படம் கடந்த 1999-ம் ஆண்டு நடிகர் விஜய் நடிப்பில் வெளியான நெஞ்சினிலே படத்தின் காப்பி என்று நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். இரண்டு படங்களின் கதையும் ஒன்று தான் என்று ஒப்பிட்டு டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர். இதனால் சிம்பு ரசிகர்கள் கடும் கோபத்தில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement