• May 07 2024

7 கோடி முதல் ரூ. 35 கோடி வரை சம்பாதிக்கிறாரா ...எமோஷ்னலாக மணிமேகலை கொடுத்த பேட்டி..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தனது சினிமா பயணம் குறித்து  எமோஷ்னல் பேட்டி   ஒன்றை கொடுத்துள்ளார் மணிமேகலை.

சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக தனது கேரியரை தொடங்கியவர் வி.ஜே மணிமேகலை. அவர் அங்கு பல லைவ் ஷோக்களையும் , பிரபலங்களின் நேர்காணல்களை தொகுத்து வழங்கிய அவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார்.



சில வருடங்களுக்கு முன்பு பெற்றோர் எதிர்ப்புகளை மீறி உசைன் என்ற நடன இயக்குனரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு மணிமேகலையின் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்து இருந்ததால் வேறு வழியின்றி நண்பர்கள் முன்னிலையில் இவர்கள் பதிவு திருமணம் செய்து கொண்டனர்.



இவ்வாறுஇருக்கையில்  விஜய் டிவி பக்கம் வந்தார், இவர் கலந்துகொள்ளாத நிகழ்ச்சியே இல்லை என்றளவிற்கு இப்போது ஆகிவிட்டது.எந்த ஒரு நிகழ்ச்சியை எடுத்தாலும் அதில் மாகாபா போல இவரும் உள்ளார்.



இந்நிலையில் அண்மையில் மணிமேகலை தனது சினிமா பயணம் குறித்து பேட்டி  ஒன்றை கொடுத்துள்ளார். அதில் அவர் பேசும்போது, நாங்கள் மாதத்திற்கு ரூ. 7 கோடி முதல் ரூ. 35 கோடி வரை சம்பாதிப்பதாக ஒரு மீம் பார்த்தேன்.

ஆனால் திருமணமான முதல் இரண்டரை ஆண்டுகள் அவ்வளவு கஷ்டப்பட்டோம். BMW கார் வாங்கிய போது, எங்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது, ஆனால் இரண்டு மாதம் Due கட்டவில்லை என்பதால் காரை எடுத்து போவதாக சொன்னார்கள்.அதெல்லாம் யாருக்குமே தெரியாது என எமோஷ்னலாக பேசியுள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement