• Oct 16 2024

6முறை கருக்கலைப்பு...? விஜயலட்சுமிக்கு திடீர் மருத்துவ பரிசோதனை... வெளிச்சத்திற்கு வரப்போகும் உண்மை..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 'ப்ரண்ட்ஸ்' திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு தங்கைச்சியாகவும், சூர்யாவுக்கு ஜோடியாகவும் நடித்துப் ரசிகர்கள் மத்தியில் பேரும் புகழும் பெற்றவர் நடிகை விஜயலட்சுமி. 


இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவர், "சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டார்” என்று கூறி சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டுத் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வந்தார். 


இதனைத் தொடர்ந்து சமீபத்தில் தன்னை திருமணம் செய்து ஏமாற்றிய சீமானை கைது செய்ய வேண்டும் என சென்னை மாநகர காவல் ஆணையரை சந்தித்து நடிகை விஜயலட்சுமி மீண்டும் புகாரளித்து இருந்தார். அதில் குறிப்பாக தனக்கு தெரியாமல் 6முறை கருக்கலைப்பு மாத்திரையை கொடுத்து  கட்டாயப்படுத்தி தன்னுடைய கருவை சீமான் சிதைத்தார் எனவும் தெரிவித்திருக்கின்றார். ஆனால் சீமான் இதனை மறுத்துள்ளார்.


இதனையடுத்து விஜயலட்சுமி கூறியது உண்மையா../ பொய்யா..? என்பதனை அறிந்து கொள்ளும் நோக்கில் தற்போது நடிகை விஜயலட்சுமியை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக போலீசார் அழைத்து வந்துள்ளனர். 

எனவே இந்தப் பரிசோதனையின் முடிவில் யார் மேல் தப்பு என்பது குறித்த உண்மை வெளிச்சத்திற்கு வரக்கூடும்.

Advertisement